எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
உலகிலேயே இந்திய மக்கள் தொகையில் 2 ம் இடத்தில்உள்ளது. 1081 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ளது. இதில் வளர் இளம் பெண்களின் விகிதம் 22.5 சதவீதம் அதாவது 225 மில்லியன் ஆகும், வளர் இளம் பருவம் எண்பது 10 முதல் 19 வயதுக்குட்பட்ட பருவம் ஆகும். இந்த பருவத்தினர் குழந்தையும் அல்ல, வளர்ந்த பெண்களும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்ட பருவம். இப்பருவத்தில் எந்த ஒரு விசயத்ததை நல்லதோ, கெட்டதோ எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆர்வம் உண்டு. இப்பருவத்தில் நல்ல ஒழுக்கத்தையும், நல்ல சிந்தனையையும், நல்ல உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வி கிடைப்பது மிகவும் முக்கியம். அதில் பள்ளிகளும், பெற்றோர்களும் சமுதாயமும் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் மகளிர் மருத்துவர் என்ற முறையில் வளர் இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் 10 உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் பற்றி இங்கு காண்போம்.
1. சீரியசான சிறு நீரகத் தொற்று:- பெண்ணாக பிறந்த எல்லோரும் வாழ்நாளில் ஏதோ ஒரு தருணத்தில் நிச்சயம் இந்த அவதியை அனுபவித்திருப்பார்கள். சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை எல்லோரையும் தாக்கக் கூடிய அந்த நோய் யூரினரி இன்பெக்ஷன் எனப்படுகிற சிறு நீராகப் பாதைத் தொற்று. ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டாலும், அடிக்கடி தொடர்ந்தாலும் இந்த பிரச்சனை எப்படியெல்லாம் பாதிப்பைக் கொடுக்கிறது என்பதை பார்ப்போம்.
ஆண்களின் சிறுநீர் பைக்கும், அது வெளியேறுகிற துவாரத்துக்குமான இடைவெளி 15 செ.மீ, என்றால், பெண்களுக்கு அது வெறும் 3 செ.மீ.மட்டுமே. அதனால் மிகச் சுலபமாக கிருமிகள் பெண்களின் சிறுநீர் பையைத் தாக்குகின்றன. பெண்களுடைய உடல்வாகு மட்டுமின்றி ஒவ்வொரு வயதிலும் அவர்கள் சந்திக்கின்ற சில விஷயங்களும் இந்தத் தொற்றுக்கு மிக முக்கியமான காரணமாகிறது.
பள்ளிக்கூடம் செல்லுகிற வயதுப் பெண் குழந்தைகள், பள்ளியில் உள்ள கழிவறையின் சுகாதாரம் சரியில்லாத காரணத்தினால் சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பார்கள். தண்ணீர் குடிக்கமாட்டார்கள். இதனால் அவர்களுக்கு இந்தத் தொற்று அடிக்கடி வரும். அதன் விளைவாக வயிற்றுவலி சோர்வு, பசியின்மை. படிப்பில் கவனம் சிதறல் போன்றவை வரலாம். அடுத்து மாதவிலக்கு நாட்களில் சுத்தமாக இல்லாத பெண்களுக்கும், தரமான நாப்கின்களை உபயோகிக்காத பெண்களுக்கும் இந்த தொற்று அடிக்கடி வரும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கிறபோது எரிச்சல் , முழுமையாக கழிக்காத உணர்வு, சில நேரங்களில் காய்ச்சல் போன்றவை யூரினரி இன்பெக்ஷனுக்கான அறிகுறிகள். எப்போதோ ஒரு முறை வந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து, மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு இது அடிக்கடி வரும். அவர்கள் சிறுநீ்ர் பரிசோதனை செய்யவேண்டும். சாதாரண சோதனை மட்டும் போதாது என்கிற நிலையில் யூரின் கல்ச்சர் சோதனையும் செய்து காரணத்தைத் துல்லியமாக கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டும்.
காரணங்கள்:- போதுமான தண்ணீர் குடிக்காதினால், பள்ளி நேரங்களில் சிறுநீர் கழிக்கமால் அடக்கி வைப்பது, பிறப்புறுப்பை சுத்தமின்றி வைத்துக்கொள்ளுதல், காபி, சாக்லேட் போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல்.
தடுப்பு முறைகள்:- வருமுன்காப்பது இந்த விஷயத்தில் மிகவும் முக்கியம். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, அந்தரங்க உறுப்புக்களை சுத்தமாக வைத்துக்கொள்வது, மாதவிலக்கு நாட்களில் சுகாதாரத்தை கடைப்பிடிப்பது, தரமான, சுத்தமான, உள்ளாடைகளை உபயோகிப்பது போன்றவற்றின் மூலம் இதை தவிர்க்கலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். கொக்கோ கோலா, காபி, சாக்லேட் அருந்தக்கூடாது.
2. வெள்ளைப்படுதல்:- வளர் இளம் பெண்கள் வெள்ளப்படுவதை ஒரு பெரும் வியாதியாக நினைத்து பயப்படுகிறார்கள். இதைப்பற்றிய விழிப்புணர்வு வளர் இளம் பெண்களிடம் ஏற்படுத்தவேண்டியது அவசியம். வெள்ளைப்படுவது என்பது வாயில் உழிழ்நீர் சுரப்பது போன்ற பிறப்பு உறுப்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் போன்ற திரவம் ஆகும். நாம் எவ்வாறு உமிழ்நீர் சுரப்பை ஒரு வியாதியாக கருதவில்லையோ அதேபோல் பிறப்பு உறுப்பிலிருந்து வரும் திரவத்தையும் (வெள்ளைப்படுதல்) ஒரு நோயாக கருதக்கூடாது.எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் என்றால்;
a. பிறப்பு உறுப்பிலிருந்து வெளியேறும் திரவமானது துர்நாற்றம் அடித்தாலோ,
b. பிறப்பு உறுப்பில் ஊரல் எடுத்தாலோ,
c. பிறப்பு உறுப்பிலிருந்து வரும் திரவமானது நிறம்மாறி வந்தாலோ (பச்சை, மஞ்சள்)
d. நாப்கின் வைக்கும் அளவுக்கு அதிகமாக சுரந்தாலோ.
3. obesity& pcod மற்றும் முன்மாதவிடாய் சிக்கல்கள் - இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம்
1. மாறுபட்ட நாகரீக வாழ்கை முறை
2. துரித உணவுகள் உட்கொள்ளுதல்
3. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு
மாறுபட்ட நாகரீக வாழ்க்கை முறை:- தற்பொழுது உடல் உழைப்பு, விளையாட்டு ஏதுமின்றி வளர் இளம் பெண்கள் டிவி, கம்யூட்டர், செல்போன்,செல்பி என்றுதான் இருக்கிறார்கள். முன்பு போல கிணற்றில் நீர் இறைக்க, அம்மி ஆட்டுக்கல் அரைக்க, அதிகாலையி்ல் எழுந்து குனிந்து கோலம் போட, மாலையில் விளையாட்டு என்ற இருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது.
பூப்பெய்திய பருவத்தில் கிடைக்கும் உளுந்தங்களி, வெந்தயக்களி, போன்ற உணவுகள் எல்லாம் தற்காலக இளம்பெண்கள் சாப்பிடுவதில்லை. இவையெல்லாம் சினை உறுப்பு வளர்ச்சி, கருப்பை மற்றும இடுப்பெலும்பு விரிவடைய உதவும்.
இவ்வாறின்றி தற்போதைய நவநாகரீக வாழ்க்கை முறையால் உடல் அதிக எடை அடைதல், சினை உறுப்பு வளர்ச்சியின்றி அவற்றில் நீர் கோர்த்து கருமுட்டை வளராது, வெடிக்காது, pcod உண்டாதல். இதனால் ஒழுக்கமற்ற மாதவிடாய் மற்றும் குழந்தையின்மை உண்டாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?
29 Dec 2025புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி: அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை.!
29 Dec 2025திருவனந்தபுரம், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா.
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி - பலர் காயம்
29 Dec 2025மணிலா, இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மெக்சிகோவில் ரயில் விபத்து: 13 பேர் பலி
29 Dec 2025ஒக்ஸாகா, தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் பலியாகினர்.
-
நேபாளம் பொதுத்தேர்தல்: முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்
29 Dec 2025காத்மாண்டு, நேபாளம் பொதுத்தேர்தலை முன்னிட்டு முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



