முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் அமாவாசை திருவிழாவை முன்னிட்டு திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்ததாவது:திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செஞ்சி பேரூராட்சி மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் தற்காலிக பேருந்து நிலையங்கள், தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்தி தர வேண்டும். போக்குவரத்துத் துறை மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.முழு சுகாதார திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை, குளியலறை ஏற்படுத்திட வேண்டும். மின்வாரியத்தின் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை சரிசெய்யவும், விழாக்காலங்களில் இரண்டு நாட்களிலும் மும்முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருக்கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அமாவாசை தினங்களில் திருக்கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலைங்களில் சி.சி.டிவி மூலம் கண்காணிக்கப்பட்டு பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மூலம் மருத்துவக்குழு மற்றும் அவசர ஊர்திகள் திருக்கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், திண்டிவனம் சார் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், காவல் ஆய்வாளர்கள், வட்டார வளர்ச்சி, போக்குவரத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago