முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கை: கலெக்டர் ராஜேஷ் தகவல்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017      விழுப்புரம்

 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ ஃ மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 23 விளையாட்டு விடுதிகள் மற்றும் 5 விளையாட்டுப் பள்ளிகள் பின்வரும் இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி – மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், என்.எல்.சி. பள்ளி-நெய்வேலி, அரசு மேல்நிலைப்பள்ளி-புதூர்-சென்னை, செல்வம் மேல்நிலைப்பள்ளி-நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவியருக்கான விளையாட்டு விடுதி - ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, நேரு உள்விளையாட்டரங்கம்-சென்னை, பாரதி வித்யாபவன்-திண்டல்-ஈரோடு, செல்வம் மேனிலைப்பள்ளி-நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள பின்வரும் விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் மாணவ ஃ மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வு வரும் 25.04.2017 அன்று தொடங்கி 30.04.2017 முடிய நடைபெற உள்ளது. மாணவர் போட்டிள், 1. தடகளம் 2. இறகுப்பந்து 3. கூடைப்பந்து 4. குத்துச்சண்டை 5. கிரிக்கெட் 6. கால்பந்து 7. வாள்சண்டை 8. ஜிம்னாஸ்டிக்ஸ் 9. கைப்பந்து 10. ஹாக்கி 11. நீச்சல் 12. டேக்வோண்டோ 13. வாலிபால் 14. பளூதூக்குதல் 15.கபாடி 16. துப்பாக்கி சுடுதல் 17. மேசைப்பந்து 18. டென்னிஸ் 19. ஜீடோ 20. ஸ்குவாஷ் 21. கடற்கரை கையுந்துபந்து மற்றும் வில்வித்தை மாணவியர் போட்டிகள், 1. தடகளம் 2. இறகுப்பந்து 3. கூடைப்பந்து 4. குத்துச்சண்டை 5. கால்பந்து 6. வாள்சண்டை 7. ஜிம்னாஸ்டிக்ஸ் 8. கைப்பந்து 9. ஹாக்கி 10. நீச்சல் 11. டேக்வோண்டோ 12. வாலிபால் 13. பளூதூக்குதல் 14.கபாடி 15. துப்பாக்கி சுடுதல் 16. மேசைப்பந்து 17. டென்னிஸ் 18. ஜீடோ 19. ஸ்குவாஷ் 20. கடற்கரை கையுந்துபந்து மற்றும் 21. வில்வித்தை. விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ ஃ மாணவியர் 2017-2018 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய படிவங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை அணுகி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது றறற.ளனயவ.வn.பழஎ.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு விடுதிகள் தொடர்பான விவரங்களை றறற.ளனயவ.வn.பழஎ.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ கடலுனூh@ மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நல அலுவலர்களிடம் வருகின்ற 20.04.2017 க்குள் சமர்ப்பிக்கப@பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago