முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவரப்பேட்டை கோதண்ட ராமஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் எழுந்தருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளியன்று கோலாகலமாக நடைபெற்றதுரத்தினபுரி என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட கவரப்பேட்டையில் எழுந்தருளி உள்ள அருள்மிகு சீதா லஷ்மண ஆனுமன் சமேத ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு அபிஷேகம்

கும்பாபிஷேகத்தை ஓட்டி கடந்த திங்களன்று முதல் தினமும் பல்வேறு யாகங்களும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக தினமான வெள்ளியன்று யாக சாலை பூஜை, கணபதி பூஜை, கோ பூஜை போன்றவை நடத்தப்பட்டது. தொடர்ந்து கும்ப புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து சீதா லஷ்மண அணுமன் சமேத கோதண்ட ராமஸ்வாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சீதா ராமஸ்வாமி திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி அருள் பெற்று சென்றனர். இதனை தொடர்ந்து சுவாமி திருவீதி உலா பக்தர்கள் புடை சூழ கவரப்பேட்டை வீதிகளில் பவனி வந்தது

இந்த கும்பாபிஷேகத்தை காண சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கவரப்பேட்டை பகுதி மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து