எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது. நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன் மாதா பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி சிவசக்தியாக ஐக்கிய ரூபிணியாக அர்த்த நாரிசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.
இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும். மகேஸ்வரி, கௌமாரீ, வராஹி என துர்கா தேவியாகவும், அடுத்த மூன்று நாட்களில் மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என லட்சுமி தேவியாகவும், நிறைவுறும் மூன்று தினங்களில் சரஸ்வதி நரசிம்மீ சாமுண்டி என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து வணங்குகிறோம். இந்த நாட்களில் நைவேத்யங்களைப் படைத்து கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை பாடி, ஆடி பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்டவரத்தை சக்தியானவள் கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.
கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பதன் நோக்கம்
நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும் இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக்காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.
• முதல் படியில் ஒரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல் செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
• இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
• மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்
• நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்
• ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்
• ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
• ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
• எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும் நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
• ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு - சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி லட்சுமி பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.
சாரதா நவராத்திரிப் பெருவிழாவில் அம்பிகைக்கு செய்யவேண்டிய அலங்காரங்கள், அர்ச்சனை மலர்கள், பழம் இலை நிவேதனம் ஆகியவற்றை பார்ப்போம்....!
நவராத்திரி நாட்கள் அலங்காரங்கள் அர்ச்சனை மலர்கள் பழம், இலை நிவேதனம்
1 நாள் மகேஸ்வரி வில்வம் மல்லி வாழை வில்வம் வெண்பொங்கல் காராமணிசுண்டல்
2 நாள் கௌமாரி துளசி, முல்லை , துளசி மாம்பழம் புளியோதரை புட்டு
3 நாள் வாராகி சண்பகம், மரு, சம்பங்கி பலா, மரு சர்க்கரை பொங்கல் பலா, எள்ளுப்பொடி
4 நாள் மஹாலட்சுமி ஜாதிமல்லி கொய்யா, கதிர்பச்சை தயிர்சாதம் பட்டாணி
5 நாள் வைஷ்ணவி விருட்சிபூ செண்பகம் மாதுளை வீபூதிப்பச்சை பொங்கல், வடகம், பயாசம், மொச்சைப்பயிறு, சுண்டல்
6 நாள் இந்திராணி குங்குமப்பூ பாரிஜாதம் நாரத்தை சந்தனம் தேங்காய்சாதம் மாதுளை சாத்துகொடி மொச்சைப்பயிறு சுண்டல்
7 நாள் சரஸ்வதி தும்பை, தாழம்பூ பேரீட்சை தும்பை எலுமிச்சைசாதம்; கடலைப்பருப்பு சுண்டல் சத்துமாவு
8 நாள் நரசிம்ஹி மருதாணி சம்பங்கி திராட்சை பன்னீர் பால்சாதம் அப்பம்
9 நாள் சாமுண்டிஸ்வரி மரிக்கோ முத்து தாமரை நாவல் மரிக்கொழுந்து வெல்லசாதம் கொண்டை கடலைசுண்டல்
10 நாள் மஹா துர்க்கை செவ்வரளி, ரோஜா செவ்வாழை சர்க்கரை பொங்கல் புளியோதரை தயிர்சாதம்
தகவல்: சங்கரலிங்க சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவில் அர்ச்சகர்,
தொகுப்பு: ஜஸ்டின்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 days ago |
-
இளைஞர் மரண வழக்கில் கைதான 5 காவலர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
01 Jul 2025சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
-
அரசின் மானியம் இல்லாவிட்டால்... எலான் மஸ்க்கை எச்சரித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
01 Jul 2025வாஷிங்டன் : அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா சி.இ.ஓ., எலான் மஸ்க், அநேகமாக தென்னாப்பிரிக்கா திரும்பி விடுவார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
-
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க பயணம்
01 Jul 2025டெல்அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ தகவல்
01 Jul 2025வாஷங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறி
-
எல்லை நிர்ணய விவகாரங்களில் இந்தியாவுடன் பேச தயார்: சீனா
01 Jul 2025பெய்ஜிங் : இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
-
2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: இங்கி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
01 Jul 2025பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் இன்று தொடங்கவுள்ள நிலைியல் வெற்றியே பெறாத மைதானத்தில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசி
-
நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம்
01 Jul 2025புதுடில்லி : அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த அடுத்த ஓரிரு நாட்களில் டில்லியில் இருந்து வியன்னா சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டு இருந
-
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலில் 74 பொதுமக்கள் பலி
01 Jul 2025காசாமுனை : காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 74 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
-
பிறந்தநாளை முன்னிட்டு வெங்கையா நாயுடு, அகிலேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து த
-
தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவை இடைநீக்கம் செய்தது நீதிமன்றம்
01 Jul 2025பேங்காக், கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இடைநீக்கம் செய
-
வரி மசோதா நிறைவேறினால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவேன்: மஸ்க்
01 Jul 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
-
பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது தவிர வேறு எந்த விஷயத்திலும் பாக்.குடன் பேச்சு இல்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
01 Jul 2025நியூயார்க் : பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது என்றும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தவிர வேறு எந்த விஷயத்திலும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை ந
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது
01 Jul 2025இராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சிவகாசி கோட்டாட்சியராக பாலாஜி பொறுப்பேற்ப்பு
01 Jul 2025விருதுநகர், சிகாசி கோட்டாட்சியராக மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பாலாஜி பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
01 Jul 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 1) பவுனுக்கு ரூ.840 என அதிரடி ஏற்றம் கண்டு விற்பனையானது.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு செல்வீர்களா? - முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்
01 Jul 2025சென்னை : இ.பி.எஸ். வீட்டிற்குச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த பதிலளித்துள்ளார்.
-
தகவல் கிடைத்தவுடன் திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து விட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
01 Jul 2025சென்னை : திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
-
தேசிய மருத்துவர்கள் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : மருத்துவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்று தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ராமநாதபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
01 Jul 2025புதுடில்லி : மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 87-ஐ ராமநாதபுரம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்காக வெற்றி நிச்சயம் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார் : ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு
01 Jul 2025சென்னை : சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
01 Jul 2025மதுரை : திருப்புவனம் இளைஞர் லாக்அப் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
காவலாளி அஜித் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
01 Jul 2025சென்னை, திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர் நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்ட
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை: இ.பி.எஸ்.
01 Jul 2025சென்னை, “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க.
-
வீடு, வீடாக சென்று பிரசாரம் ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Jul 2025சென்னை, டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.