எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சமீப காலமாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்று ஜப்பானியக் காடை வளர்ப்புத் தொழில் குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் ஈட்டுவதுடன், ஒரு மாத கால வயதிற்கு முன்பே விற்பனை செய் யப்படுவதால் அதிக முக்கியத்துவம் வாய்;ந்து விளங்குகிறது.
காடை இறைச்சி மற்றும் முட்டைகள் மிகச்சிறந்த சுவைமிக்க உணவாக விளங்குகிறது. அவற்றிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள் இதர கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஒப்பிடும்போது அதிகமாக காணப்படுவதால் எல்லா வயது மக்களுக்கும் ஏற்ற உணவாக விளங்குகிறது.
காடை இனங்கள் : தற்பொழுது வளர்ந்து வரும் சூழ்நிலைக்கேற்ப தமிழ்நாடு கால்நடை மருத் துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட TANUVAS நந்தனம் காடை-1, TANUVAS நந்தனம் காடை -2 மற்றும் TANUVAS நாமக்கல் காடை-3 ஆகிய ரகங்கள் இறைச்சி உற்பத்திக்காக தற்பொழுது தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பெருவாரியாக வளர்க்கப்பட்டு வருகிறது.
காடை வளர்ப்பு முறை : காடைகளை வளர்க்க அதிகளவு முதலீடு தேவையில்லை. பயன்படுத்தாத கோழிப்பண்ணைகள் அல்லது குறைந்த முதலீட்டிலான கோட்டங்களில் காடைகளை வளர்க்கலாம். வசதிக்குத் தகுந்தாற்போல் ஆழ்கூளம் மற்றும் கூண்டுகளில் காடை களை கூண்டு முறையில் காடைகளை வளர்க்கும் போது அவற்றிற்கு நோய்க் கிருமிகளின் தாக்கம் குறைவதுடன் காடைகளை கையாள்வதும் எளிதாக இருப்பதால் ஆழ்கூளத்தைக் காட்டிலும் கூண்டு முறையில் வளர்ப்பதே சிறந்தது. ஆனால், அவற்றிற்கு ஆரம்ப முதலீடு சற்று அதிகமாகத் தேவைப்படும்.
காடை குஞ்சுகள் பராமரிப்பு
ஒரு நாள் வயதுடைய இறைச்சி வகை காடை குஞ்சுகள் சுமார் 8.10 கிராம் எடையுடையதாக இருக்கும். முதல் பத்து நாட்களில் பருவநிலைக்குத் தகுந்தாற் போல் முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக செயற்கை வெப்பமும், அதன் பிறகு 7 நாட்கள் இரவு நேரங்களில் செயற்கை வெப்பமும் அளிப்பது நல்லது. நல்ல முறை யில் பராமரிக்கப்பட்ட இனப்பெருக்க காடைகள் மற்றும் குஞ்சு பொரிப்பான்களின் மூலம் பெறப்படும் காடை குஞ்சுகளில் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவான உயிரிழப்பே காணப்படும்.
பொதுவாக முதல் இரண்டு வார வயதில் பெரும்பாலான காடைகள் தண்ணீர் வைக்கும் பாத்திரங்களில் விழுந்து இறக்கும் இழப்பே அதிகமாகும். காடை குஞ்சு கள் தண்ணீர் பாத்திரங்களில் விழுந்து இறப்பதைத் தவிர்க்க தண்ணீரினுள் கோலி குண்டுகள் அல்லது கூலாங்கற்களை ஒருவாரம் வரை இடவேண்டும். தண்ணீர் பாத்திரங்களுக்கு பதிலாக நிப்பிள் வகை தண்ணீர் அளிப்பான்கள்(Nipple drinkers) மூலமும் தண்ணீர் கொடுக்கலாம். இவ்வாறு நிப்பிள் வகை தண்ணீர் அளிப்பான்களை பயன்படுத்துவதால் சுத்தமான தண்ணீரைக் தொடர்ச்சியாக காடை குஞ்சுகளுக்கு அளிக்கலாம்.
மேலும் காடை குஞ்சுகளின் கால்கள் மிகவும் மிருதுவாக இருப்பதால் அவற்றை வழவழப்பான பரப்பில் (செய்தித்தாள் போன்றவற்றின் மீது) வளர்க்கும் போது அதிக காடை குஞ்சுகள் நொண்டியாகி, நாளடைவில் தீவனம் மற்றும் தண் ணீர் எடுக்காமல் இறக்க நேரிடும். எனவே காடை குஞ்சுகளை பராமரிக்கும் போது அவற்றை சொர சொரப்பான காகிதப் பரப்பில்(Corrugated sheet) வளர்க்கலாம். அல்லது சணல் துணியைப் பரப்பி அதன் மேல் காடை குஞ்சுகளை முதல் மூன்று நாட்கள் வளர்க்கலாம். பின்னர், அவற்றினை வழவழப்பான செய்தித்தாள் போன்ற வற்றின் மேல் வளர்த்தாலும் கால்கள் ஊனமாவதில்லை. காடைகள் இரவில் தீவ னம் உட்கொள்ளத்தக்க வகையில் செயற்கை வெளிச்சம் அளிக்க வேண்டும்.
இறைச்சிக்காக காடைகள் இரண்டாவது வார வயதில் சுமார் 9c கிராம் எடையுடையதாக இருக்கும்.
வளர்பருவ பராமரிப்பு : இரண்டாவது வார வயது முதல் 4 அல்லது 5 வார வயதுடைய காடை களை வளர்பருவ காடைகள் (Grower quail) என்றழைக்கிறோம். இந்த வயதில் காடைகள் மிகுந்த சுறுசுறுப்புடனும் உயிரிழப்புகள் மிகவும் குறைவாகவும் காணப் படும். இத்தகைய காடைகள் வேகமாக வளர்வதால் அவற்றிற்கு தொடர்ச்சியாக தீவனம் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இறைச்சிவகை காடைகள் : 3 வார வயதில் சுமார் 150 கிராம் உடல் எடையும், 4 வார வயதில் சுமார் 210 கிராம் எடையும் உடையதாக இருக்கும்.
தீவனம் : காடைகளுக்கு இரண்டு வகை தீவனங்கள் அளிக்க வேண்டும். முதல் இரண்டு வாரங்கள் ஆரம்பகால தீவனத்தையும்; (Cuail Starter feed) பின்னர் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் இறுதிகால தீவனத்தையும் ; (Quail Finisher) அளிக்க லாம்.
காடைத் தீவனத்தை கோழித் தீவனத்திற்கு பயன்படுத்தும் மூலப்பொருட் களைக் கொண்டே தயாரிப்பதால், பிரத்யேக காடைத் தீவனம் கிடைக்காத பட்சத் தில் இறைச்சிக் கோழிகளுக்கு பயன்படுத்தும் முன் ஆரம்பகாலத் தீவனத்தையே (பிராய்லர் பிரிஸ்டார்டர்) முதல் நான்கு வாரங்களுக்கும் பயன்படுத்தலாம். ஒரு காடையானது 200 கிராம் உடல் எடையை அடைய சுமார் 500 கிராம் தீவனத்தை உட்கொள்ளும்.
காடை வளர்ப்பில் தீவனச்செலவு 70 விழுக்காடுகளுக்கும் அதிகமாக இருப்ப தால், தீவனச்செலவை குறைக்க வேண்டும். சொந்தமாக தீவனம் தயாரிப்பதின் மூலம் தீவனத்திற்கான செலவைக் குறைக்க முடியும்.
தண்ணீர் : காடை வளர்ப்புக்கு தீவனமும் தண்ணீரும் மிகவும் இன்றியமையாத பொருள் களாகும். இவ்விரண்டும் நோய்க்கிருமிகளற்று சுத்தமாக இருந்தால் பெரும்பாலான நோய்கள் வருவதை தவிர்க்கலாம். எனவே, முதல் இரண்டு வாரங்கள் காடை குஞ்சுகளுக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த நீரைக் குடிநீராக அளிப்பது நல்லது. அதன் பின்னர் காடைகள் அருந்தும் தண்ணீரில் ஹைட்ரஜன் பெர்ஆக்ஸைடு என்ற கிருமி நாசினியை 10 லிட்டர் தண்ணீருக்கு 1 மி.லி. வீதம் கலந்து அளிக்கலாம்.
நோய்கள் : காடைகளின் மிக முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதிக நோய் எதிர்ப்புத் திறனாகும். இதர கோழியினங்களைப் போன்று காடைகள் பெரும்பாலான நோய் களால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், காடைகளுக்கு எந்தவித தடுப்பூசியும் அளிக்கத் தேவையில்லை. தண்ணீர் மற்றும் தீவனம் சுகாதாரமாக இல்லாமலிருந் ளதால் அல்லது நன்றாக பராமரிப்பு முறைகளைக் கையாளாமலிருந்தால் அவற்றிற்கு நோய்கள் வரவாய்ப்புள்ளது. அவ்வாறு ஏதேனும் நோய்கள் வந்தால் அவற்றின் காரணத்தை அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி கண்டறிந்து சரியான மருந்துகளை அளிக்கலாம்.
இதைத் தவிர காடைகளைத் ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது இறைச்சி கோழிகளை தாக்கும் இரத்தக் கழிச்சல் நோய்வ; (Coccidiosis) ர வாய்ப்புள்ளது. இதனைத தடுக்க தீவனத்தில் இரத்தக் கழிச்சல் நோய்த் தடுப்பு மருந்துகளை (Anti-coceidials) கலந்து அளிக்கலாம். காடைகளை கூண்டு முறையில் வளர்க்கும் போது இரத்தக் கழிச்சல் நோய் பெரும்பாலும் வருவதில்லை.
காடைப்பண்ணைப் பொருளாதாரம்
தற்போது ஒரு காடைக்குஞ்சு ரூ. 4.50 முதல் ரூ.5.50 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன. காடைத் தீவனமானது ஒரு கிலோவிற்கு ரூ. 28 முதல் ரூ.30 வரையில் கிடைக்கின்றன. ஒரு காடை அதன் விற்பனை வயது வரை சுமார் 500 கிராம் வரை தீவனம் உட்கொள்வதால், ஒரு காடை உற்பத்தி செய்ய ரூ. 19 முதல் ரூ.21 வரை செலவாகிறது.
ஒரு நாள் வயதுடைய காடைக்குஞ்சுகள் பல்வேறு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிலிருந்து பெறலாம். TANUVAS நாமக்கல் காடை -1” என்ற வீரிய ரக இறைச்சி வகை காடைகள் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கோழியின அறிவியல் துறையில் ரூ.5.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொகுப்பு : முனைவர் ப.ரவி, முனைவர் து.ஜெயந்தி, மற்றும் மருத்துவர் ந.ஸ்ரீபாலாஜி
தொடர்புக்கு : கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி, மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 14-ல் கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
23 Sep 2025சென்னை, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
தினேஷ் கார்த்திக் நியமனம்
23 Sep 2025ஹாங் காங் சிக்ஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷப் விளையாடுவது சந்தேகம்
23 Sep 2025மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த், சொந்த மண்ணில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டா
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.