முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்குழு கூட்டம்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்குழு கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தெரிவித்தாவது:விழுப்புரம் மாவட்டத்தில் 2800 முதன்மை அங்கன்வாடி மையங்கள் மற்றும் 141 குழு அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.  இம்மையங்களில் 1,45,270 குழந்தைகள், 26,263 கர்ப்பிணிப்பெண்கள், 21,716 பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் இணை உணவுத் திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.  66,758 குழந்தைகள் முன்பருவக் கல்வி மற்றும் மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.  அங்கன்வாடி மையங்களில் பயனடையும் குழந்தைகளில் 217 எண்ணிக்கை குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் 33,298 எண்ணிக்கை மிதமான ஊட்டச்த்து நிலையில் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவப் பரிந்துரை செய்து தனி கவனம் செலுத்தி ஊட்டச்சத்து நிலை முன்னேற்றம் செய்ய அறிவுறத்தினார்.தனியார் வாடகை மற்றும் இதர அரசுக் கட்டிடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு தனியாக புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் எனவும், 526 அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.  அங்கன்வாடி மையங்களின் சுற்றுப்புறங்களில் முருங்கை, பப்பாளி மரக்கன்றுகள் நடவும், அங்கன்வாடி மையத்திற்கு தேவையான கீரை விதைகள் விதைத்து வீட்டுத் தோட்டம் அமைக்க வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தெரிவித்தார்.இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.க.காமராஜ், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வி.மகேந்திரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சவுண்டம்மாள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் கோ.அன்பழகி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து