எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மனிதனின் மனதிற்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அக்கால மருத்துவர்கள் முதல் இக்கால மருத்துவர்கள் வரை கூறி வருகிறார்கள்.
ஒருவரது மனதில் கவலை தோன்றும்போது, அவரது உடல் தளர்ந்து போவதும், கோபத்தில் இருக்கும்போது இதயம் படபடப்பதும் மன உணர்ச்சியின் அடிப்படையில் உடலின் தோன்றும் விளைவுகளாகும். அதிக அச்சம் ஏற்படுவதால் இதயத்துடிப்பு அதிகரித்தல், கை, கால்கள் இழுத்துக்கொள்ளுதல், சிலருக்கு அதிர்ச்சியில் இதயமே நின்று போவது கூட நிகழ்கிறது.
மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக அறிகிறோம். அதிக காரம், இனிப்பு உணவு உண்பவர்கள் வீரிய குணம் (ராட்சச) கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதிக கசப்பு, புளிப்பு உண்பவர்கள் சோம்பல் கொண்ட மனம் (தாமச) கொண்டவர்களாக இருக்கிறார்கள். எல்லா சுவைகளையும் மிதமாக உண்பவர்கள் மன அமைதியுடன் (சாத்வீக) வாழ்ப வர்களாக இருக்கிறார்கள்.
ஆக, ஒருவர் தன் மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கு ஏற்ப உணவை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். மேலும் உடற்பயிற்சி, நாடிசுத்தி, பிராணா யாமம், தியானம் போன்ற பயிற்சிகளைச் செய்வதால் தீய உணர்ச்சிகள் அடங்கி மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் பெறலாம்.
இனி மன உணர்ச்சிகளால் உண்டாகும் நோய்கள் பற்றிக்காண்போம்...!
அல்சர் என்னும் குடல்புண் : அதிக மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வார்கள் எனில், அவர்களது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. அமிலத்தின் புளிப்புத்தன்மையும் வீரியமும் குடலில் புண்களை உண்டாக்குகிறது. குடல்புண்ணால் வயிற்றில் எரிச்சல், பசி பொறுக்க இயலாமை போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
மலச்சிக்கல் : அதிக மன இறுக்கத்தால் முன்னர் குறிப்பிட்டதுபோல அதிக அமிலம் சுரக்கிறது. புளிப்புச்சுவை மலச்சிக்கலை அதிகரிக்கும் என்று முன்பே கண்டோம். தன்னைப் பற்றிய பிறர் கருத்திற்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள், அதனால் குற்ற உணர்ச்சி அடைபவர்கள் பெரும்பாலும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். சிலருக்கு புதிய இடச்சூழலும் மலச்சிக்கலைத் தோற்றுவிக்கும். இதற்குக் காரணமும் வெட்க உணர்ச்சியும் பயமுமே ஆகும்.
இருதய நோய் : அதிக கோபம், அதிக பயத்தால் இருதயம் அதிவேகமாகத் துடிக்கத் தொடங்குவதை அறிகிறோம். டென்ஷன், கோபம், பயம் போன்ற உணர்ச்சிகள் அனைத்தும் முதலில் இருதயத்தையே பாதிக்கின்றன. சிறிய விஷயங்களுக்காக கவலைப்படுபவர்கள் மற்றும் விரைவிலேயே குற்ற உணர்ச்சி அடைபவர்கள் போன்றோருக்கு இதயத்தில் பாதிப்பு உண்டாகிறது. இதனால் நரம்புச்தளர்ச்சி, இரத்த அழுத்த நோய் போன்ற நோய்கள் உண்டாகலாம்.
உடல் பருமன் - உடல் மெலிவு : மன உணர்ச்சிகளால் உடலில் அதிகப் பருமனும் தோன்றலாம்; சிலருக்கு எதை உண்டாலும் உடலில் சதைப்பிடிப்பு தோன்றாமல் உடல் மெலிவும் தோன்றலாம். டென்ஷனால் சிலருக்கு மலச்சிக்கல் தோன்றுவதுபோல, சிலருக்கு வயிற்றுப் போக்கும் ஏற்படலாம். இவர்கள் எதை உண்டாலும் உடலில் ஓட்டாது. ‘ஹிஸ் டீரியா’ எனப்படும் மனத்தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மெலிந்து போவதும் இதற்கு உதாரணம் ஆகும். உடல் மெலிவுக்கு பய உணர்ச்சியும் ஒரு காரணமே.
சோம்பல் குணம் கொண்டவர்கள் அதிக உணவை உண்டு, உடல் உழைப் பைக் குறைக்கும்போது உடலில் பருமன் தோன்றும். உணவு ஜீரணமாவது குறையும் போது வயிற்றில்; பசி தோன்றாது. அதனால் வயிறு வீக்கம், உப்புசம் போன்ற விளைவுகள் தோன்றும்.
ஆஸ்துமா : அதிக கவலை இருதயத்தைப் பாதிப்பது போலவே நம் சுவாசத்தையும் பாதிக்கிறது. அதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கூடவே நரம்புத்தளர்ச்சியும் தோன்ற லாம். தட்ப – வெப்பத்தைத் தாங்குகிற உடல் பலம் இருந்தாலும், மனபலம் இல்லாதவர்கள் உஷ்ணத்தையும், குளிரையும் தாங்க முடியாமல் அவதியுறுகின்றனர்.
நீரிழிவு நோய் : மன அழுத்தம், படபடப்பு போன்றவற்றால் இன்சுலின் சுரப்பிகளின் செயல்பாடு குறையவோ அதிகரிக்கவோ செய்யலாம். அதனால் உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மன அழுத்தத்தால் உடல் உழைப்பு குறைகிறது. அதன் காரணமாகவும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. சர்க்கரை அளவு மிகவும் குறைந்து போவதும் நோயே என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
முதுகு - இடுப்பு வலி : மனதில் தோன்றும் உணர்ச்சிகளை அடக்குவதால் முதுகுப்பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் பிறரோடு தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், மனம் விட்டு பேசவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்த நோய் : பிறரது செய்கை, பிறரது பேச்சு போன்றவை நம்மை பாதித்தால், நம் இரத்த அழுத்தம் உயருகிறது. அதிகக் கவலையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. அதிக இரத்த அழுத்தம் நரம்பு தளர்ச்சி, பக்கவாதம் போன்றவற்றிலும் கொண்டுபோய் விடுகிறது. இதிலிருந்து விடுபட தியானம், பிராணாயாமம், நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
மன அமைதிக்கான வழிகள் : டென்ஷன், கோபம் கூடாது, பொறுமை எப்பொழுதும் வேண்டும், பொறாமை கூடாது, பேராசை கூடாது, போதும் என்ற திருப்தியான மனநிலை எப்பொழுதும் வேண்டும். பெண்ணாசை கூடாது, மனைவி தவிர மற்றவர்களை தாயாக பார்க்கும் மனோநிலை வேண்டும். நாவடக்கம் வேண்டும், அதிகம் பேசுவதால் நம் ஆற்றல் வீணாகிறது. அதனால் தான் நம் முன்னோர் மாதத்தில் ஓர் நாள் அல்லது வாரத் தில் ஓர் நாள் மௌனவிரதம் பூணும் முறையைக் கொண்டு வந்தார்கள்.
உணவுக்கட்டுப்பாடு வேண்டும், மாமிசம் தவிர்க்கப்பட வேண்டும், பழம், கீரை, பச்சைக்காய்கறிகள் அதிகம் சேர்க்கலாம். பால், பழம் உணவாக எடுப்பது நல்லது. தினமும் ஆசனம் 5 நாடி சுத்தி, பிராணாயாமம் அரைமணி நேரம் செய்ய வேண்டும்.
அதிகாலை 4.00 மணிக்கு எழுந்துவிட வேண்டும். இரவு 9.30 மணி (அ) 10.00 மணிக்கு படுத்துவிட வேண்டும். இரவில் அதிக நேரம் கண்விழிப்பதால் உடலில் உஷ்ணம் ஏறுகிறது. உடலில் உஷ்ணம் ஏறுவதே பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக அமைகிறது. நம்மைத் தவறான பாதையில் செலுத்தும்படி காமத்தையும் தூண்டிவிடுகிறது.
தினமும் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, பிறரைக் குற்றம் கூறுவது போன்றவற்றைத் தவிர்க்கவும். முடிந்த அளவு பேச்சைக் குறைக்கவும்,
நல்ல ஆன்மிக புத்தகத்தை தினமும் மூன்று பக்கமாவது படிக்கவும். எல்லோரிடமும் அன்பாகயிருக்க வேண்டும். எப்பொழுதும் உண்மை பேச வேண்டும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோம்பல் கூடாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
டெல்லியில் புதிய பிரதமர் அலுவலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026டெல்லி, தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டிடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13-ம் தேதி (இன்று) த
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
வங்கக்கடல் பகுதியில் பிப்.15-ல் உருவாகிறது புதிய புயல் சின்னம்
12 Feb 2026சென்னை, வங்கக்கடல் பகுதியில் வருகிற 15-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2026சென்னை, ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ.
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு
12 Feb 2026டெல்லி, டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சந்தித்துப் பேசினார்.
-
தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ராகுலை பதவி நீக்கக்கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்
12 Feb 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மான நோட்டீஸை பா.ஜ.க. எம்.பி.
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
அகமதாபாத் விமான விபத்து: இத்தாலி நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையால் பரபரப்பு
12 Feb 2026ரோம், அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக
-
இந்தியா, ஜப்பான், கொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் சிறப்புமிக்கது: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து
12 Feb 2026நியூயார்க், இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.462.58 கோடி..! பார்லி.யில் மத்திய அரசு தகவல்
12 Feb 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ர


