எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நவீனமயமாதல், டிஜிட்டல் இந்தியா என நம் நாடு பல முன்னேற்றம் அடைந்தாலும் இன்னும் நம் நாடு விவசாயத்தையே முதகெலும்பாய் நம்பியுள்ளது. நாட்டின் மொத்த பரப்பளவில் 60.4 சதவீதம் விவசாய நிலமாகும். இந்திய ஜிடிபியில் 16 சதவீதம் விவசாயத்திலிருந்து கிடைத்துள்ளது.
பல வகையான உணவு பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவே முதலிடம். இவ்வளவு பெருமையிருப்பினும், இந்தியாவில் பத்தில் இரண்டு பேர் பசியோடு தான் இருக்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாட்டால் இறப்பு இன்னும் தொடர்கிறது. விவசாயியின் நிலைகளை சொல்லி உலகம் அறிய வேண்டியதில்லை. முப்போகம் தந்த அதே மண் ஒரு போகம் கூட தர மறுக்கிறது. இந்த நிலைக்கு யார் காரணம்? காரணம் காரியம் இரண்டுமே ஒன்று தான்...அதுவும் நாம் தான்....
பசுமை புரட்சி என்றோம்! இரசாயணங்களை பூமியில் கொட்டித் தீர்த்தோம்! இயந்திரங்களை கொண்டு பூமியை கிளறி பதம் பார்த்தோம்! பூமியின் உதிரத்தை இயந்திரம் கொண்டு உறிந்தோம்! விளைச்சல் என்று நம்பி விதைகளை மாற்றினோம்! மாற்றம் செய்த விதையை நம்பி பாரம்பரிய விதைகளை மாற்றினோம்! உலகையே ஆக்கி அழிக்கும் நுண்ணுயிர்களை இழந்தோம்! உயிரும் உதிரமும் கொண்ட மண்ணை உயிரற்ற திடப்பொருளாக்கினோம்!
நம்மால் விளைந்த இந்த விளைவுக்கு நாமே விடை காண்போம்... பூமியைக் காக்க புதியதோர் மாற்றம் கொண்டு வருவோம்....
அந்த மாற்றம் இயற்கை முறையில் வேண்டும்..விளை நிலத்திற்கான உண்மை பொருளை உலகறிய செய்த நம்மாழ்வர் அவர்கள் கொண்டு வரா விரும்பிய மாற்றமாக இருத்தல் வேண்டும்.
நிலத்தின் வளத்தை பெருக்க வேண்டும் அதுவும் இயற்கை முறையில்... இது சாத்தியமா? நிச்சயம்... பயிர்த்தொழில் என்பது இயற்கை சார்ந்த்தாக மட்டுமே அமைதல் வேண்டும்.... காரணம் இயற்க்கையை வெல்ல மணிதன் எடுக்கும் அனைத்து முயற்சியும் தோல்வியிலேயே முடியும்.
மண்ணை காக்க வேண்டிய பொருட்களை தெருவின் குப்பைகளில் கொட்டி விட்டு, இரசாயனத்தை நம்பிக் கொண்டிருக்கிறோம். இரசாயணங்கள் முதலில் விளைச்சல் தரலாம். ஆனால், இவை அனைத்தும் விசங்கள்.சிறிது சிறிதாய் நிலத்தை மலடாக்கும்.அதன் விளைவு.... விளை நிலம் விலை நிலமாகும்...
நிலத்தின் வளத்தை பெருக்க.... பயிர் சுழற்சி செய்ய வேண்டும்... கலப்பு பயிர் சாகுபடி செய்யலாம். கலப்பு பயிரால் நுண்ணுயிர்கள் மேம்படும். பயிருக்கு தேவையான தனிமங்கள் அனைத்தையும் நுண்ணுயிர்கள் பெருகச் செய்யும். நுண்ணுயிர்கலாள் காற்றோட்டம் அதிகரிக்கும். ஈரப்பிடிப்பு அதிகரிக்கும். மண் அரிப்பு தடுக்கப்படும்.
இதை கடந்து பலர் அறியாத உண்மை ஒன்றும் உண்டு. கலப்பு பயிர் சாகுபடியால் கரி உள்வாங்கப்படுவதால், புவி வெப்பமயமாதல் குறைக்கப்படுகிறது. மண்ணில் அதிகப்படியான வளங்கள் அதன் மேல் புறத்தில் தான் உள்ளது.
நவீன வேளாண் இயந்திரம் கொண்டு மண்ணை கிளருவதால் வளங்களை சரியாக பயன்படுத்த இயலவில்லை.
“இயற்கையை இயற்கைக்கே திருப்பியளிக்க வேண்டும்” என்பது ஒற்றை வைக்கோல் புரட்சியின் ஆசிரியர் ஃபுகாக்கோவின் கருத்து. அவரது கருத்து நிதர்சனமான உண்மை. முதல் பருவத்தில் கிடைக்கும் வைக்கோலை மண்ணிலேயே வைத்து மண்ணின் வளத்தை பெருக்க வேண்டும். இதுவே நம் பாரம்பரியம்.
இது மட்டுமல்லாமல், மண்ணின் வளத்தை காக்க மண்புழு உரம் மிக அவசியமானது. இரசாயன உரத்தில் கிடைக்கும் தாதுக்களை விட இது 20 சதவீதம் அதிகமாக வளத்தை பெருக்கும்.
ஒரு ஏக்கர் நிலத்தில் தோராயமாக 40,000 மண்புழுக்கள் இருக்கும் என்பது டார்வினின் ஆராய்ச்சி. மண்புழுக்கள் இருக்கும் நிலமே வளமானது. நிலத்தின் வளத்தை மண்புழுவே காட்டிக்கொடுக்கும். தனிமங்களை மண் ஏற்றுக்கொள்வதற்கு மண்புழுக்களே பெரிதும் உதவுகிறது.
தாவர, விலங்குக் கழிவுகள் மீது பூஞ்சை, பாக்டீரியா மண்புழுக்கள் வளரும்.இதனால் அந்த கழிவு பழுப்பு நிறத்திற்கு மாறும். இத்தகைய கழிவைக் கொண்டு நில வளத்தைப் பெரிதும் மேம்படுத்தலாம்.
மாட்டின் சானத்தை மட்டுமே எருவாக பயன்படுத்தலாம் என சிலர் எண்ணுகின்றனர். ஆனால் தமிழன் தன் இரண்டாவது தாயாக கருதும் மாடு தரும் அனைத்துமே விளைச்சலை ஊக்குவிக்கும். பஞ்சகாவ்யாவை விதை நேர்த்தி தொடங்கி, நடவு, வளர்ச்சிப் பருவம், பூ வளர்ச்சி, காய்ப் பெருக்கம்,
அறுவடைக்குப் பின் கெடாமை என பல இடத்திலும் பயன்படுத்தலாம். இந்தியாவில் தேவைப்படும் சக்தியில் 66% கால் நடைகள் மூலமே கிடைக்கின்றன. நிலக்கரி, பெட்ரோல், டீசல் மூலம் கிடைப்பவை 14% மட்டுமே. கால் நடைகள் மூலம் கிடைக்கும் சக்தியும் எருவும் சூழலை மாசுபடுத்துவது இல்லை.
மாறாக மண் நலத்தையும், மக்கள் நலத்தையும் காக்க வல்லவை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
உழவு பற்றிய அறிவியலின் வயது ஒரு 100 வருடந்தான். 10,000 ஆண்டுகளாய் விவசாயம் செய்யும் உழவன், ஒரே பயிரில் பல இரகங்களை கையாண்டான்.
அவனது பாரம்பரிய விதைகள் நோய்க்கு உட்படவில்லை. அறிவியலின் ஆட்சியால் பல இரகங்கள் அழிந்தன. இரசாயன உரங்களுக்கு கட்டுப்படாத பல இரகங்கள் ஓரங்கட்டப்பட்டன. இரசாயனத்தை கொட்டி வணிகத்தை மட்டுமே பெருக்கியது, நவீன வேளாண்மை. இந்த நிலை தொடர்ந்தால் இருக்கும் ஓரிரு இரகங்களும் அழிந்துவிடும்.
நாம் பின்பற்றும் நவீன வேளாண்மையில் 38% இழப்பீடு நோய், பூச்சி மற்றும் களைகளால் ஏற்படுகிறது. இத்தகைய இழப்பீடுகளை இயற்கை வேளாண்மையால் கட்டுபடுத்தலாம். பருவம் அறிந்து பயிர் செய்தல், மூலிகைச் சாறு தெளித்தல் ஆகியனவே உரிய விளைச்சல் எடுக்க தகுந்த முறைகள்.
பூச்சிகள் அனைத்துமே எதிரிகள் அல்ல. மகரந்த சேர்க்கைக்கு அவை அனைத்துமே இன்றியமையாதவை. கால் ஏக்கர் நிலத்தில் பல லட்சம் சிலந்திகள் வாழ்கின்றன. அவை பல ஆயிரம் மீட்டர் வலைகளை பின்னுகின்றன. பயிரை அழிக்கும் தாய்ப் பூச்சிகள், சிலந்தி வலையில் சிக்குவதால் பயிர்கள் காப்பற்றப்படுகின்றன. ஆனால், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படும்போது சிலந்தி வலைகள் நொடியில் அழிக்கப்படுகின்றன.
நாட்டில் 60சதவீதம் நிலப்பரப்பு வானம் பார்த்த பூமியாக உள்ளது. இந்த நிலங்களில் எந்தவித இழப்பும் இன்றி இயற்கை வேளாண்மை செய்யலாம். இது குறித்து சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான “இக்ரிசாட்” ஆராய்ந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தைஉயர்த்த பண்ணைக் குட்டை அமைக்கலாம்.
உலகமெங்கும் நஞ்சில்லா உணவுக்கான வரவேற்பு உயர்ந்துள்ளது. மேற்கண்ட நடைமுறையை பின்பற்றுவதால் உலகுக்கே தலைமை தாங்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது.
இயற்கை வழங்கிய நீரையும், நெற்றி வேர்வை சிந்தி உழவன் திருத்திய நிலத்தையும் கம்பெனியிடம் கொடுத்துவிட்டு, மக்களுக்குச் சத்துணவு வழங்கிய மாடுகளை கறிக்கடைக்கு அனுப்பிவிட்டு, ஆலைகளின் சாக்கடையை வயலுக்குள் பாய்ச்சி, விளைந்த பொருளுக்கு விலை ஏறி விடாதபடி கட்டுப்பாடு விதித்து, உழவர்களை நிலத்தை விட்டு வெளியேறி, ஏற்றுமதி இறக்குமதிக்கு அகலச் சாலை போட்டு, பசியை மாற்றாவும் ஆற்றவும் போகிறோமா... அல்லது ஆலைத் தொழிற்சந்தையில் மனித எந்திரங்களை மலிவாக வழங்கப் போகிறோமா?
இது நம்மாழ்வார் அவர்கள் உலகிற்க்கு விட்டுச் சென்ற கேள்வி... இதுக்கான விடை நாம் இந்த பூமிக்காக மேற்கொள்ளும் மாற்றாந்தான்......
கவிபிரியா.பா - பி.எஸ்.சி(வேளாண்மை) இறுதி ஆண்டு. பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி, வேட்டாம்பாடி, நாமக்கல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
டெல்லியில் புதிய பிரதமர் அலுவலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026டெல்லி, தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டிடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13-ம் தேதி (இன்று) த
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
வங்கக்கடல் பகுதியில் பிப்.15-ல் உருவாகிறது புதிய புயல் சின்னம்
12 Feb 2026சென்னை, வங்கக்கடல் பகுதியில் வருகிற 15-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2026சென்னை, ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ.
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு
12 Feb 2026டெல்லி, டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சந்தித்துப் பேசினார்.
-
தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ராகுலை பதவி நீக்கக்கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்
12 Feb 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மான நோட்டீஸை பா.ஜ.க. எம்.பி.
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
அகமதாபாத் விமான விபத்து: இத்தாலி நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையால் பரபரப்பு
12 Feb 2026ரோம், அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக
-
இந்தியா, ஜப்பான், கொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் சிறப்புமிக்கது: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து
12 Feb 2026நியூயார்க், இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.462.58 கோடி..! பார்லி.யில் மத்திய அரசு தகவல்
12 Feb 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ர


