எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நம்மால் முடியும் என்ற எண்ணம் மனதில் இருந்தால் வாழ்க்கையில் எதனையும் எளிதில் சாதித்து விடலாம்’’ என்று ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொங்காராயகுறிச்சி கிளை சார்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவ-மாணவியர்களுக்கான ‘’சாதித்துக் காட்டுவோம்’’ என்ற தேர்வு வழிகாட்டி முகாம் கொங்கராயகுரிச்சி ஆனந்தா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சாதித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி
முகாமிற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அஸாருதீன், பொருளாளர் சேக்முகம்மதுஅலி, துணைத்தலைவர் தமீம், துணைச்செயலாளர்கள் சிக்கந்தர், நாஸர், இமாம்பரீது, மருத்துவஅணி செயலாளர் ரஷீத்காமில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி செயலாளர் ஷமீம் வரவேற்றார். முகாமினை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகள் தங்களைப்போன்று கஷ்டப்படக்கூடாது படித்து சமூகத்தில் தலைசிறந்தவர்களாக வரவேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்காகவே தங்களது பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர். ஒவ்வொரு பிள்ளைகளும் தமது பெற்றோர்களின் கஷ்டத்தை உணர்ந்தும், அவர்களது எண்ணத்தை நிறைவேற்றிடவேண்டும் என்பதையும் மனதில் கொண்டும் நன்றாக படித்திடவேண்டும். நான் படித்த காலத்தில் எல்லாம் இதுபோன்ற தேர்வு வழிகாட்டும் முகாம்களோ இல்லை வழிகாட்டுவதற்கோ யாரும் இல்லை. ஆனால் இன்றுள்ள காலகட்டத்தில் வழிகாட்டுவதற்கு சமூகத்தில் கல்வியாளர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். இதனை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கான பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணித்திடவேண்டும். நாம் தேர்வு செய்யும் பாதைக்கு ஏற்ப நமது பயணம் அமைந்திடும் என்பதனை உணர்ந்திடவேண்டும். பாடங்களை புரிந்து படிப்பதுடன், பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபெறவேண்டும். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்தும், சத்தான உணவுகளை சாப்பிட்டும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும். தினமும் எவ்வளவு நேரம் படிக்கவேண்டும், எந்தஎந்த பாடங்களை படிக்கவேண்டும் என்று திட்டமிட்டு அதற்கேற்ப பாடங்களை படித்திடவேண்டும். பொதுத்தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள் தான் நமது வருங்கால வாழ்வை நிர்ணயிக்கிறது என்பதை மாணவர்கள் உணர்ந்து கவனமாக கருத்துடன் படித்திடவேண்டும். படித்தால் மட்டும் போதாது இதுபோன்ற வழிகாட்டும் முகாம்களில் கலந்துகொண்டு தேர்வுகளை எப்படி பயமின்றி, தன்னம்பிக்கையுடன் எழுதலாம் என்பதனையும் மாணவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். பொதுவாக மாணவ, மாணவியர்கள் பொதுத்தேர்வுகள், போட்டித்தேர்வுகளை எழுத செல்லும்போது மனதைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செல்லவேண்டும். வினாத்தாள் எப்படி இருக்குமோ? என்ற அச்சம் மனதில் ஒருபோதும் வரவே கூடாது. ‘’நம்மால் முடியும் என்ற எண்ணம் மனதில் இருந்தால் வாழ்க்கையில் எதனையும் எளிதில் சாதித்துவிடலாம்’’ என்பதை மாணவ, மாணவியர்களான நீங்கள் மனதில் நிலைநிறுத்திக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்றார். முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு, கல்வியாளர்கள் உமர்பாரூக், அன்சார்அலி ஆகியோர் தேர்வுகளை எழுதும் வழிமுறைகள் குறித்து பாடத்திட்டங்களுடன் விளக்கம் அளித்தனர். இதில், மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளையும் சேர்ந்த 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் திரளாக பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் தேர்வுக்கான பாடத்திட்டங்களின் கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை கொங்கராயகுறிச்சி கிளை செயலாளர் மீரான், பொருளாளர் மன்சூர், துணைத்தலைவர் இஸ்மாயில், துணைச்செயலாளர் கலீல், மாணவரணி செயலாளர் அபுபக்கர் சித்தீக் மற்றும் நெல்லைஜங்சன் கிளை தலைவர் பீர்முஜிப் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில், மாணவரணி செயலாளர் ஷமீம் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
உதய்பூரில் இன்று நடக்கும் திருமண நிகழ்வில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவை கரம் பிடிக்கிறார்
01 Feb 2026ஐதராபாத், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
01 Feb 2026சென்னை, பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Feb 2026சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
01 Feb 2026புதுடெல்லி, சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
தைப்பூசத் திருநாள்: இ.பி.எஸ். வாழ்த்து
01 Feb 2026சென்னை, தைப்பூசத் திருநாள் வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மத்திய பட்ஜெட்டிற்கு இ.பி.எஸ். வரவேற்பு
01 Feb 2026சென்னை, 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை: பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் முழக்கம்
01 Feb 2026புதுடெல்லி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
-
மத்திய பட்ஜெட் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் உள்ளது: பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
01 Feb 2026புதுடெல்லி, தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில
-
வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2026டெல்லி, வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை: மத்திய பட்ஜெட் குறித்து மம்தா கருத்து
01 Feb 2026டெல்லி, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2026டெல்லி, 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
01 Feb 2026சென்னை, மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற
-
வரி தாக்கலின் போது பொய் கணக்கு காட்டினால் 100 சதவீதம் அபராதம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்
-
ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி..!
01 Feb 2026புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி
01 Feb 2026புதுடெல்லி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம்
01 Feb 2026டெல்லி, எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
-
முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய பட்ஜெட்டில் எஸ்.டி.டி.யை அதிகரித்ததால் பங்குச்சந்தைகள் திடீர் வீழ்ச்சி
01 Feb 2026புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.டி.டி.
-
வார ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
01 Feb 2026- நெல்லையப்பர் கோவிலில் செளந்திரசபா நடனம்.
- வைத்தீசுவரன் கோவிலி செல்வமுத்து குமாரசுவாமி புறப்பாடு.
- திருச்சேறை சாரநாதர் சப்தாவர்ணம்.
- சென்னை சிங்காரவேலவர் தெப்பம்
-
இன்றைய ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
01 Feb 2026


