முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி கவர்னர் கிரன்பேடியின் டுவிட்டர் பக்கம் முடக்கம் பாகிஸ்தான் சதியா? சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      புதுச்சேரி

புதுச்சேரி கவர்னராக கிரன்பேடி பதவி ஏற்ற நாள் முதல் சமுக வளைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றம் டுவிட்டர் மூலம் பொதுமக்களிடம் நேரடி தொடர்பில் இருந்து வருகிறார்.

 டுவிட்டர் பக்கம் முடக்கம்

 சமுக வளைதளங்களில் தன்னுடைய சுற்றுப் பயண விபரம், பங்கேற்கும் நிகழ்ச்சிகள், அறிக்கைகள், கருத்துக்கள், விழா உரைகள் அகியவற்றை பதிவு செய்து வருகிறார். மேலும் ஆளும் காங்கிரஸ் அமைச்சர்கள் மீதான விமர்சனங்களையும் வெளியிட்டு வருகிறார். ஊழல முறைகேடுகள், நிர்வாக புகார்கள் குறித்து பதிவு செய்ய கவர்னர் மாளிகை தனி வாட்ஸ் நெம்பரையும் வெளியிட்டுள்ளது. இதில் வரும் புகார்களுக்கு கவர்னர் கிரன்பேடி நடவடிக்கை எடுப்பதோடு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பதிவிட்டு வருகிறார். ந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய பிரதேசம் இந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க கவர்னர் கிரன்பேடி சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்றார். இந்தூர் விமான நிலையத்தில் இறங்சி செல்போனை ஆன் செய்த போது புரோதர்க்கீஸ் பாகிஸ்தான் என்ற பெயரில் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து கவர்னர் கிரன்பேடி தனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட தகவலை வாட்ஸ் அப்பில் தெரிவித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-கடந்த 2010-ம் ஆண்டு முதல் டுவிட்டர் கணக்கு பக்கம் தொடங்கி அதில் பதிவிட்டு வருகின்றேன். இந்தூர் விமான நிலையத்தில் நேற்று மாலை(நேற்று முன்தினம் மாலை) எனது செல்போனை இயக்கிய போது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது. டுவிட்டர் பக்கத்திற்குள் நுழைய முடியவில்லை. அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து டுவிட்டர் இந்தியா நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளேன். மேலும் சைபர் கிரைம் போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். கவர்னரின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது பாகிஸ்தான் நாட்டின் சதி வேலையா? என்று சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து