எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் மானிய விலையில் வழங்கும் விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு ரூ.24,95,687/- மானியத்திலான அம்மா இரு சக்கர வாகனத்தினை வழங்கினார்.விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி பேசியதாவது-
அம்மா இரு சக்கர வாகனம்
புரட்சித்தலைவி அம்மா பெண்களின் நலனுக்காகவும், பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தி தன்னம்பிக்கையுடன் வாழ்ந்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். புரட்சித்தலைவி அம்மா வேலைக்கு செல்லும் மற்றும் சொந்தமாக தொழில் செய்யும் உழைக்கும் மகளிர்கள் சுதந்திரமாகவும், விரைவாகவும் தங்களது பணியிடங்களுக்கு சென்று வரவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக் கூடத்திற்கு அழைத்து செல்லவும், யாரையும் சார்ந்து இருக்காமல், தங்களது அனைத்து பணிகளையும் குறித்த நேரத்தில் செய்திட ஏதுவாக, ஆண்டிற்கு ஒரு லட்சம் மகளிருக்கு 50 சதவித மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்கள். பாரத பிரதமர் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழகம் முழுவதும் ஒரு இலட்சம் உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை 24.02.2018 தொடங்கி வைத்தார்கள்.அதனடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 4455 உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. இன்று நடைபெறும் விழாவில் முதற்கட்டமாக மாநகராட்சி பகுதியில் 8 மகளிர்களுக்கும், நகராட்சி பகுதிகளில் 14 மகளிர்களுக்கும், பேரூராட்சி பகுதிகளில் 34 மகளிர்களுக்கும், ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 44 மகளிர்களுக்கும் ஆக மொத்தம் 100 உழைக்கும் மகளிர்களுக்கு ரூ.24.96 இலட்சம் மதிப்பில் மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களை பெறும் மகளிர்கள் தங்களது பணிகளையும், தொழில்களையும் சிறப்பாக செய்து வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென பேசினார். விழாவிற்கு தலைமை வகித்து, கலெக்டர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது-தமிழ்நாடு அரசு வேலைக்கு செல்லும் பெண்களின் பல்வேறு சிரமங்களை குறைக்கும் வகையில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. பெண்கள் படித்ததற்கு பிறகு வேலைக்கு செல்லவும், வரவு செலவுகளை சுதந்திரமாக செய்திடவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிர் வீட்டில் குழந்தைகளை கவனிக்கவும், சமையல் பணிகளையும், குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுக்கும் பணிகள் உள்பட பல்வேறு பணிகளை வீட்டில் செய்து முடித்து விட்டு, பணிகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உழைக்கும் மகளிர்களின் சிரமங்கள் குறைந்து விரைவாக பணிகளை முடிக்க முடியும். திருநெல்வேலி மாவட்டத்தில் 4455 உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு ஆண்டும் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படும். இன்று 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் 125 சிசிக்கு குறைவில்லாத வாகனங்கள் ஜனவரி 2018-க்கு பின்பு தயார் செய்யப்பட்ட வாகனங்களை வாங்க வேண்டும். விண்ணப்பிக்கும் மகளிருக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மகளிரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு குறைவாக இருந்திட வேண்டும். இந்த விதிமுறைகளின் அடிப்படையில், இவ்வாண்டில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில், ஆதரவற்றோர், விதவை, மாற்றுத்திறனாளி, கணவனால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட முன்னுரிமை பெற்றோருக்கும், மற்ற மகளிருக்கும் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டோருக்கு வழங்கப்படும். வாகனத்தின் விலையில் 50 சதவிதம் அல்லது அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. வங்கிகளில் கடன் பெற்று, வாகனம் வாங்குவோருக்கு மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இன்று வாகனம் பெறும் நீங்கள் இதை நல்லபடியாக பயன்படுத்தி, வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென பேசினார்.இவ்விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், விஜிலா சத்தியானந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.முருகையாபாண்டியன், அ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத் தலைவர் சக்திவேல்முருகன், டான்பெட் துணைத் தலைவர் கண்ணன் (எ) ராஜூ, ஆவின் சேர்மன் ரமேஷ், கூட்டுறவு பேராங்காடித் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, அக்ரோ சேர்மன் மகபூப் ஜான், நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆறுமுகம், திருநெல்வேலி கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் செவல் முத்துசாமி, முக்கிய பிரமுகர்கள் சுதா பரமசிவம், பரணி சங்கரலிங்கம், தச்சை மாதவன், ஜெரால்ட், சேர்மபாண்டி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
டெல்லியில் புதிய பிரதமர் அலுவலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026டெல்லி, தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டிடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13-ம் தேதி (இன்று) த
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
வங்கக்கடல் பகுதியில் பிப்.15-ல் உருவாகிறது புதிய புயல் சின்னம்
12 Feb 2026சென்னை, வங்கக்கடல் பகுதியில் வருகிற 15-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2026சென்னை, ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ.
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அகமதாபாத் விமான விபத்து: இத்தாலி நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையால் பரபரப்பு
12 Feb 2026ரோம், அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு
12 Feb 2026டெல்லி, டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சந்தித்துப் பேசினார்.
-
தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ராகுலை பதவி நீக்கக்கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்
12 Feb 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மான நோட்டீஸை பா.ஜ.க. எம்.பி.
-
இந்தியா, ஜப்பான், கொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் சிறப்புமிக்கது: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து
12 Feb 2026நியூயார்க், இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.462.58 கோடி..! பார்லி.யில் மத்திய அரசு தகவல்
12 Feb 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ர
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 Feb 2026- இராமேஸ்வரம் சுவாமி , அம்பாள் தங்க விருசப சேவை.
- ஶ்ரீசைலம், வேதாரண்யம், திருவைக்காவூர் கோவில்களில் சிவபெருமான் பவனி.
- திருமயம் ஆண்டாள் முத்துக்குறி கண்டயருளல்.
-
இன்றைய நாள் எப்படி?
12 Feb 2026


