எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.31 - தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி நிவாரணப்பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்செய்ய ரூ.150 கோடி நிதியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உயரதிகாரிகள், அமைச்சர்கள் அடங்கிய கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் தலைமைச் செயலாளர் உட்பட பல்துறைச் செயலாளர் அனைவரும், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உட்பட அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடந்த 25.12.2011 அன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 27.12.2011 அன்று வலுவடைந்து புயலாக உருவெடுத்தது. தானே என்று பெயரிடப்பட்ட அந்த புயலானது புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே நேற்று 30.12.2011 காலை 6.30 மணியளவில் கரையைக் கடந்தது.
தானே புயல் தமிழகத்தை தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்த உடனேயே, புயல் ஆபத்திலிருந்து காப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு நான் உத்தரவிட்டேன். எனது ஆணையின் பேரில், கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன.
மேலும், 29.12.2011 அன்று தலைமைச் செயலாளர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் சென்னை மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 6,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர். 125 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் புயல் காற்று வீசும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு முதல் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. வருவாய்த் துறை, காவல் துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப் பணித் துறை உட்பட சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விழிப்புடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அரக்கோணத்திலுள்ள தேசிய பேரிடர் தனிப்புப் படையை சார்ந்த 4 குழுக்கள் கடலூர், நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து, புயல் மற்றும் அதன் காரணமாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண ஏற்பாடுகள் குறித்து நேற்று (30.12.2011) நான் ஆய்வு செய்தேன்.
இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், தீயணைப்புத் துறை இயக்குநர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளதால் சாலை போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இவற்றை சீராக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், போக்குவரத்திற்கு தடையாக விழுந்துள்ள மரங்களை அகற்றி, போக்குவரத்தை சரிசெய்யவும், மின் கம்பங்களை சரிசெய்து மின் இணைப்பை இன்று மாலைக்குள் அளித்திடவும் நான் உத்தரவிட்டுள்ளேன். உடனடி நிவாரணப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைத்தல் ஆகியவற்றிற்காக 150 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.
மேலும், தானே புயலால் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் சேதங்களை மதிப்பீடு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்ப சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தப் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பி.வி. ரமணாவையும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு டி.கே.எம். சின்னையாவையும், விழுப்புரம் மாவட்டத்திற்கு சி.வி. சண்முகத்தையும், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கே.ஏ. ஜெயபாலுவையும், கடலூர் மாவட்டத்திற்கு எம்.சி. சம்பத்தையும் இன்றே செல்லும்படி நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது எதனால்? புள்ளி விவரங்களுடன் அமைச்சர் ரகுபதி விளக்கம்
02 Feb 2026சென்னை, பா.ஜ.க.வுக்கு வாக்குகள் விழாது என்பதால் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துளளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை: ஒரேநாளில் சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்தது
02 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 7,600 அதிரடியாக குறைந்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –02-02-2026
02 Feb 2026 -
பட்ஜெட் அறிவிப்பில் தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைக்காததால் ஏமாற்றம்
02 Feb 2026சென்னை, மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பிலும், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமா
-
தமிழ்நாடு முதல்வரின் காருக்கு வழிவிட சிக்னலில் நிறுத்தப்பட்ட விஜய்யின் கார்
02 Feb 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காருக்கு வழிவிட சிக்னலில் விஜய் கார் நிறுத்தப்பட்டது.
-
சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றி போர்முரசம் த.வெ.க.: விஜய்
02 Feb 2026சென்னை, சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் திராவிட மாடலின் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது: தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
02 Feb 2026சென்னை, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் திராவிட மாடலின் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது என்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தி.மு.க.
-
தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா சார்பில் கடும் ஆட்சேபனை
02 Feb 2026பெய்ஜிங், தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதற்கு சீன அரசு கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளது.
-
பாக். ராணுவம்-தீவிரவாதிகள் இடையே தொடரும் மோதல்: 200-க்கும் மேற்பட்டோர் படுகொலை
02 Feb 2026இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகளுக்கும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் சண்டையில் இருதரப்ப
-
திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய மதுரை கலெக்டர்
02 Feb 2026மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் மதுரை மாவட்ட கலெக்டர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
-
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா: விஜய் பங்கேற்று பேச்சு
02 Feb 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் நேற்று கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசிய அதன் தலைவர் விஜய், தீய சக்தியை வீழ்த்த தூய சக்தியான தமிழக வெற்றிக்கழகத
-
திடீரென மூச்சுத் திணறல்: நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
02 Feb 2026சென்னை, நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பில் நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
திருச்சியில் பிப். 21-ல் நா.த.க. மாநாடு: 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
02 Feb 2026சென்னை, நாம் தமிழர் கட்சியின் மாநாடு வருகிற 21-ம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று சீமான் அறிவித்திருந்தார்.
-
சிகிச்சை அரங்கு கட்டிடம் கட்ட மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
02 Feb 2026சென்னை, மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடத்துக்கு ரூ.10 கோடி, மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.2 கோடி என மொத்தம் ரூ.12 கோடி நிதி உடனடியாக அறிவிக்க
-
பழனி முருகனுக்கு காவடி எடுத்த அண்ணாமலை
02 Feb 2026பழனி, தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக பா.ஜனதா முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்ய பழனி வந்தார்.
-
மாமல்லபுரத்தில் ரூ.100 கோடியில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்
02 Feb 2026சென்னை, மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான அடிப்படை வசதிகள் வழங்க ரூ.
-
அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் அவகாசம்
02 Feb 2026சென்னை, பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கில், தேர்தல் ஆண
-
ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தனபால் கோரிக்கை
02 Feb 2026புதுடெல்லி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.
-
ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
02 Feb 2026டாக்கா, இரு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமரும், அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனாவுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறைத்தண்டன
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
02 Feb 2026- நெல்லையப்பர் கோவிலில் தெப்பம், ரிசப வாகனம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாசி மண்டல உற்சவாரம்பம்.
-
இன்றைய நாள் எப்படி?
02 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
02 Feb 2026


