முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசநோய் கண்டறியும் நவீன நடமாடும் ஆய்வக வாகனத்தினை தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      தேனி
Image Unavailable

தேனி ,- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவ நலத்துறையின் சார்பில் காசநோய் கண்டறியும் நவீன நடமாடும் ஆய்வக வாகனத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.
      மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவிக்கையில், தமிழக அரசின் சார்பில் தமிழக மக்கள் சமூக, பொருளாதாத ஏற்றத்தாழ்வின்றி ஆரோக்கியத்துடன் வாழும் பொருட்டு அனைவரும் உயர்தர சிகிச்சையை பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், காசநோயாளிகளை எளிதில் கண்டறியும் வகையில் தமிழக அரசால் காசநோய் வாகனம் மார்ச்-24 முதல் துவக்கி வைக்கப்பட்டது. அந்த வாகனத்தின் மூலம் காசநோயாளிகளை கண்டறிவதற்காக 18.06.2018 முதல் 23.06.2018 வரை வட்டார அளவில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. வாகனத்தின் மூலம் காசநோய் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று காசநோய் பரிசோதனை செய்யப்படும். அவ்வாறு பரிசோதனை செய்யப்படும் பொழுது காசநோய் கண்டறியப்பட்டால் அன்றைய தினத்திலிருந்து சிகிச்சைக்கான மாத்திரைகள் வழங்கப்படும். இப்பணியில் முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர், முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர், ஆய்வக நுட்புநர், காசநோய் மேற்பார்வையாளர் ஆகியோர் பணியில் ஈடுபடுவார்கள்.
        காசநோய் கண்டறியும் பணியானது 18.06.2018 அன்று போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டொம்புச்சேரி பகுதிகளிலும், 19.06.2018 அன்று சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓடைப்பட்டியிலும், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோம்பையிலும், 20.06.2018 அன்று பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவதானப்பட்டியிலும், 21.06.2018 அன்று கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூடலூரிலும், 22.06.2018 அன்று ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எம்.சுப்புலாபுரம், கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமனூரிலும், 23.06.2018 அன்று தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரபாண்டியிலும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அரசின் சார்பில் நடத்தப்படும் இப்பரிசோதனையினை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்  தெரிவித்தார்.
    இந்நிகழ்ச்சியின்போது இணை இயக்குநர் மருத்துவ நலப்பணிகள் மரு.சரஸ்வதி  , துணை இயக்குநர் (பொ) (காசநோய் பிரிவு) மரு.முருகன்  , தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ அலுவலர் (காசநோய் பிரிவு) மரு.பிரவீண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து