முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.19,31,280 - மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2018      தேனி
Image Unavailable

  தேனி,- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (30.07.2018) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்   தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பான 323 மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
 பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமுமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்  உத்தரவிட்டார்.
மேலும், வேளாண்மைத்துறையின் சார்பில், கூட்டுப்பணையத்திட்டத்தின் கீழ் 2 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு தலா ரூ.6,05,640 - வீதம் ரூ.12,11,280 - மதிப்பிலான டிராக்டர் வாகனங்களையும், 2 குழுக்களுக்கு ரூ.3,60,000 -  வீதம் ரூ.7,20,000 - மதிப்பிலான வேளாண் இயந்திர தளவாட பொருட்களையும் என மொத்தம் 2 குழுக்களுக்கு ரூ.19,31,280 - மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,  வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகம்மது அப்துல் நசீர், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) து.தங்கவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) கா.செந்தில்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எம்.சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு.ராமகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இ.கே.ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து