முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செயற்கை சிறுநீரகம்

இதய பாதிப்புக்கு ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்படுவது போல் சிறுநீரகம் செயலிழந்தால் பொருத்துவதற்கு செயற்கை சிறுநீரகத்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வில்லியம் பி‌ஷல், சுவோராய் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். கையடக்க வடிவிலான இந்த கருவி, காபி கப் அளவில் நானோ தொழில் நுட்ப முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்பை பயன்படுத்தி அதில் சிறுநீரக முடிச்சுகளில் இருந்து திசு செல்களை எடுத்து சல்லடையில் தேனடை உருவாக்குவது போல் செல்களை வளர வைக்கிறார்கள். பின்னர் அந்த எந்திரத்தை அடிவயிற்றுக்குள் வைத்து சிறுநீரக ரத்த நாளங்களுடன் இணைத்து பொருத்தி வைத்து விடுவார்கள். இந்த செயற்கை கருவி ரத்த சுத்திகரிப்பு மட்டுமின்றி இயற்கையாக சிறுநீரகம் செய்யும் வேலைகளை செய்யும்.

மிரட்டும் மலசேஷ்யா

குளிர் காலத்தில் பொடுகு தொல்லை அதிகரிப்பதோடு, தலையில் மலசேஷ்யா என்ற பூஞ்சை தொற்றும் உருவாகும். முகம், மார்பு, முதுகு ஆகிய உடலின் பிற பாகங்களுக்கும் பூஞ்சைத் தொற்று பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு தீர்வு வாரத்திற்கு இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

புதிய தொழில்நுட்பம்

பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள், புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. பேஸ்புக்கின் மர்மமான பில்டிங் 8 திட்டம் குறித்து ரெஜினா டௌகன் விளக்கினார். இந்த திட்டமானது மனதில் நினைப்பதை வார்த்தைகளாக டைப் செய்யும் வழிமுறை ஆகும். மனித மூளையில் அனைத்து செயல்களை மேற்கொள்ள உதவும் பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிறிய சிப்செட்கள், மூளை நினைப்பதை அப்படியே டைப் செய்ய வழி செய்கிறது. அதாவது, மூளையின் ஸ்பீச் சென்டரில் இருந்து வரும் வார்த்தைகளை, நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப் செய்ய வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் அதிபர்

நாற்பது வருடத்தில் அமெரிக்காவிற்கு ஒரு கருப்பு அதிபர் கிடைப்பார் என ராபர்ட். எப். கென்னடி கூறியது போல, ஒபாமா அதிபரானார். இவர், ஹாரி பாட்டர்-ன் அனைத்து புத்தகங்களையும் முழுவதுமாக படித்தவர்.  2016- வரையிலும் அதிக ட்விட்டர் பின்தொடர்பவர்களை கொண்டிருந்த உலக தலைவர்களுள் முதல் இடத்தை பெற்றிருந்தவர் இவர் தான்.

வியாழனை விட 10 மடங்கு மிகப் பெரிய கோள்

சூரிய மண்டலத்தில் நமக்கு தெரிந்து 9 கோள்கள் உள்ளன. ஆனால் அதையும் தாண்டி பால்வெளி மண்டலத்துக்குள் சென்றால் எண்ணற்ற கோள்களும், நட்சத்திரங்களும் கோடி கணக்கில் கொட்டி கிடக்கின்றன. இயற்கையின் முடிவற்ற ஆச்சரியங்களில் ஒன்றாக பிரபஞ்சம் எப்போதும் திகழ்ந்து வருகிறது. அதற்கு சாட்சியாக தற்போது வியாழனை விட மிகப் பெரிய கோளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கோள் பூமியிலிருந்து 325 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாம். இது வியாழனை விட 10 மடங்கு பெரியது, இதன் எடை ஏறக்குறைய 10 சூரியன்களுக்கு சமம் என்கின்றனர். இது தொடர்பான விஞ்ஞான தகவல்கள் நேச்சர் இதழிலும் வெளியாகி உள்ளன. “b Cen (AB)b" என பெயரிடப்பட்டுள்ள இந்த கோள் தனிப்பட்ட சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறென்ன பிரபஞ்சத்தின் ஆச்சரியங்கள் விரிவடைந்து கொண்டே போகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

இங்கிலாந்துக்கு முதலிடம்

பிறந்தது முதல் 3 மாதங்களில் நீண்ட நேரம் அழுது அடம் பிடித்து தொந்தரவு செய்யும் குழந்தைகள் குறித்த ஆய்வில் உலக நாடுகளின் குழந்தைகள் இடம் பெற்றனர். இதில், இங்கிலாந்து குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரமும், வாரத்தில் குறைந்தது 3 நாட்களும் அழுகின்றன. கனடா, இத்தாலியிலும் இதேநிலைதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago