முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முதன் முதலில் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்

சிறைச்சாலைகள் பலவிதம் உண்டு, அதில் ஒரு விதம் தான் வீட்டுச்சிறை. முதன்முதலில் 'வீட்டுச்சிறை' வைக்கப்பட்டவர் ஈராக்கை சேர்ந்த விஞ்ஞானி அல்-ஹாத்திம். கி.பி.1011-ம் ஆண்டு எகிப்தில் வாழ்ந்த போது, மன்னரை குறித்து அவமதித்து பேசியதற்காக கிபி 1021 வரை வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வீட்டுச்சிறையில் அகப்பட்டுக் கொண்ட இன்னொரு விஞ்ஞானி கலிலியோ. பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது என்கிற அறிவியல் உண்மையை சொன்னதற்காக தண்டிக்கப்பட்டார்.தற்போது வீட்டுச் சிறை முறையை அதிகம் பயன்படுத்தும் நாடு இத்தாலி. அந்நாட்டில் கைதிகள் தண்டனை முடியும் நிலையில் இருந்தாலோ, உடல்நலக்குறைவாக இருந்தாலோ கைதிகளை வீட்டுச்சிறைக்கு மாற்றி விடுவார்கள். நியூசிலாந்தில் 2 வருடங்களுக்கு குறைவான தண்டனை பெற்ற கைதிகளை வீட்டிலேயே சிறை வைக்கிறார்கள்.வீட்டுச்சிறையில் அடைபட்டு உலகப்புகழ் பெற்றவர் மியான்மர் நாட்டை சேர்ந்த ஆங்சான் சூகி. காஷ்மீர் பிரிவினையை தூண்டியதற்காக வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்  ஷேக் அப்துல்லா. அவர் அடைக்கப்பட்ட இடம் கொடைக்கானல். பாகிஸ்தானில் பூட்டோ, நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் உள்ளிட்டோரும் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்காலத்தில் இந்த பட்டியல் இன்னும் நீளமானது.

தக்காளியின் மகிமை

வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி அன்றாட உணவில் பயன்படுத்தும் தக்காளிக்கு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வயிற்று புற்று நோய் ‘மாலிக்னன்ட் செல்’ எனப்படும் திசுக்களால் ஏற்படுகிறது. இந்த திசுக்களை மேலும் வளரவிடாமலும், அவை பரவாமலும் தடுக்கும் சக்தி தக்காளிக்கு உள்ளதாம்.

நிம்மதி பெருமூச்சு

தற்போதைய சூழ்நிலையில், பெண்கள் தனியாக அமெரிக்காவுக்குப் பயணம் செய்யும் சூழலில், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா, ஜனவரி 18-ம் தேதி முதல் விமானங்களில் "எக்கனாமி வகுப்பில் 3-வது வரிசையிலிருக்கும் 6 இருக்கைகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

பறக்கும் கார்

ஜப்பானில், கார்ட்டிவேட்டர் என்ற பெயரிலான 30 பொறியாளர்கள் அடங்கிய குழு ஸ்கை ட்ரைவ் என்ற பறக்கும் காரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. 2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது, இந்த பறக்கும் காரை கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என இளம் பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தகுந்த நேரம்

ஆண்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர், பெண்கள் 2.5 லிட்டர் தண்ணீரையும் குடிக்க வேண்டும். காபி, டீ குடிப்பதற்கு முன் தண்ணீர் குடித்தால் அல்சர் வருவதை தடுக்க வும், குளிப்பதற்கு முன் தண்ணீர் குடித்தால், இரத்த அழுத்தம் குறைய செய்யும். காலையில் எழுந்த உடன் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடலுறுப்புக்கள் சீராக செயல்பட ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, உடலில் தேங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.

உலகிலேயே சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நாடு எது தெரியுமா?

உலகிலேயே சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நாடு எது தெரியுமா..உலகிலேயே அழகிய நாடு என வர்ணிக்கப்படும் பிரான்ஸ்தான் அது. ஐநாவின் சுற்றுலா கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 2017 இல் ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்ஸ் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 86.9 மில்லியன். இதற்கு அடுத்தபடியாக அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்த நாடு ஸ்பெயின். அங்கு விசிட் அடித்தவர்கள் எண்ணிக்கை 81.8 மில்லியன். அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றவர்கள் 76.9 மில்லியன், சீனா-60.7 மில்லியன்,இத்தாலி - 58.3 மில்லியன் என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago