முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கோகோ-விற்கு மாற்று.

‘கோகோ’ வில் இருந்து சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. அதற்காக சர்வதேச அளவில் 45 லட்சம் டன் கோகோ தேவைப்படுகிறது. ஆனால் விவசாயிகளால் அந்த அளவு கோகோ சாகுபடி செய்ய முடியவில்லை. 37 லட்சம் டன் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். இதற்கு மாற்று வழியை கண்டுபிடிக்க பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லோ பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், பலாக் கொட்டையில் இருந்து சாக்லேட் தயாரிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர். பலாக் கொட்டையில் சாக்லேட்டின் நறுமணம் மற்றும் சுவையுடன் கூடிய ஒரு பொருள் மறைந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதில் இருந்து சாக்லேட் தயாரிக்க பயன்படும் பொருள் உருவாக்க முடியும். இதன் மூலம் கோகோ பற்றாக்குறையால் சாக்லேட் தயாரிப்பில் ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

பாடஹஸ்தாசனம்

பாடஹஸ்தாசனத்தை செய்வது மிகவும் எளிது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு, கால்கள் நன்கு வலிமை அடையும். மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.இந்த ஆசனத்தை தினமும் 3 முதல் 5 முறை செய்து வந்தால், இடுப்பு வளையும் தன்மை பெறுகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கிறது. கால்கள் வலுப்பெறுகின்றன.

சே குவேராவுக்கு நேரு

உலக வரலாற்றில் பல்வேறு வேறுபட்ட ஆளுமைகள் சந்தித்துள்ளனர். அவை உலக வரலாற்றையே மாற்றி அமைத்தும் உள்ளன. அதில் இன்றைக்கும் உலக இளைஞர்களின் கவர்ச்சி நாயகனாக திகழும் சே குவேரா முக்கியமானவர். கியூபாவின் நீண்ட கால அதிபரான பெடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரான அவரை கியூப புரட்சி கால கட்டத்தின் போது தங்களுக்கு ஆதரவு அளித்த முக்கிய ஆசிய தலைவரான அன்றைய இந்திய பிரதமர் நேருவை சந்திக்க அனுப்பி வைத்தார். இருவரும் 1959 ஜூன் 30 இல் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது சே குவேராவுக்கு நேரு யானை தந்தத்தால் கைப்பிடி செய்யப்பட்ட குறுவாளை பரிசாக வழங்கினார். அது இன்னும் ஹவானாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வட்டாயானம்

வட்டாயானாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கால் தசைகளும், முழங்காலும் வலுப்பெறுகின்றன. இந்த ஆசனத்தை தினமும் 3 முதல் 5 முறை செய்து வந்தால் கால் தசைகளும், முழங்காலும் வலுப்பெறுதோடு மட்டுமல்லாமல், பிரம்மச்சர்யத்தை கடைப்பிடிக்க இந்த ஆசனம் பெரிதும் உதவும்.

கிடைத்தது ஆதாரம்

லிபியாவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் கிடைத்த ஆதாரங்களின் படி, மனிதர்கள் 10,000 வருடங்களுக்கு முன்பே காட்டு தானியங்கள் மற்றும் தாவரங்களை வைத்து பானைகளில் சமைத்துள்ளது தெரிய வந்தள்ளது. ஆரம்பத்தில் சைவமாகத்தான் இருந்த மனிதர்கள் , பின் விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிடும் அசைவத்திற்கு மாறியிருக்கின்றனர்.

அடையாளம் காண

கத்திரிக்காயில் ஓட்டை இருந்தால் உள்ளே புழு இருக்கும். அதனால் சிறு ஓட்டை கூட இல்லாமல் கவனமாக வாங்கவேண்டும். காம்பு நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். குச்சி போன்று இருந்தால் காய் முற்றல் என்று அர்த்தம். வெள்ளை வரிகள் இருந்தால் காய் கசக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago