முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வீட்டில் காற்றை சுத்திகரிப்பு செய்ய அற்புதமான 6 செடிகள் வளர்க்கலாம்

Image Unavailable

இன்றைக்கு நகரங்களில் நம் வீட்டுக்குள்ளேயே சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை வந்துவிட்டது. இதற்கு இயற்கையாகவே ஒரு தீர்வு இருக்கிறது, மரூள் (snake plant)-சிறந்த காற்று சுத்திகரிப்பு தாவரங்களில் ஒன்றான மருள், கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் மோனாக்சைடு, ஃபார்மால்டிஹைடு, பென்சீன், சைலீன் மற்றும் ட்ரைக்ளோரெத்திலீன் உள்ளிட்ட குறைந்தது 107 அறியப்பட்ட காற்று மாசுபாடுகளை நீக்குகிறது. எந்தவொரு காலநிலையிலும் செழித்து வளரும். மணிபிளான்ட் (Money plant)-இது ஒரு சக்திவாய்ந்த காற்று சுத்திகரிப்பு தாவரமாகும், இது உங்கள் வீட்டிலுள்ள காற்றை மிகவும் திறம்பட சுத்தம் செய்யும், இலைகள் நச்சுத்தன்மை கொண்டவை என்பதால் குழந்தைகளிடம் கவனமாக இருக்க வேண்டும். பீஸ் லில்லி (Peace lily)-இது ஒரு சிறந்த காற்று சுத்திகரிப்பு தாவரம் ஆகும். இது ஃபர்னிச்சர், மின்னணுப் பொருள்கள் போன்றவற்றால் உருவாகும் தூசுகளையும் தன்னுடைய பெரிய இலைகளின் மூலம் உள்ளிழுத்துக் கொள்ளும். கற்றாழை (Aloevera)-சருமம் சார்ந்த பிரச்னைகளுக்குக் கற்றாழை தீர்வை தரவல்லது என்பது நம் மருத்துவத்தில் காலங்காலமாக இருக்கும் விஷயம். அதைத் தவிர்த்து காற்று சுத்திகரிப்பிலும் கற்றாழை முக்கியப்பங்கு வகிக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று. இதை வீட்டில் வளர்த்தால் காற்றின் தரம் உயர்வதோடு, சிறந்த மூலிகையாகவும் நமக்கு கைகொடுக்கும். புதினா (Mint)-இதன் இலைகள் மிகவும் மணமுடையவை. இது வேகமாக வளரக்கூடியது. வீட்டில் இதை வளர்ப்பதன் மூலம் காற்றில் நல்லதொரு புத்துணர்ச்சி நீடித்திருக்கும். எலுமிச்சைப்புல் (Lemon grass)-இதில் சிட்ரல் (citral) என்னும் வேதிப்பொருள் உள்ளதால், மனச்சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியதாகவும், காற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாகவும் உள்ளது. மேலும், கிருமிநாசினியாகவும் ஓர் இயற்கை கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்