முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நாசாவை முந்தும்

நாசாவுக்குத் தேவையான விண்கலங்களைத் தயாரித்து வழங்கி வந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சந்திரனுக்கு மனிதர்களை அழைத்து செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 384,400 கிலோ மீட்டர் தூரம் உள்ள சந்திரனுக்கு 2018 -ம் ஆண்டு 2 மனிதர்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் கன ராக்கெட் மூலம் அழைத்து செல்கிறதாம்.

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் சில சிறப்பு அம்சங்கள்

தஞ்சை மாவட்டத்திலுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கி.பி 1167இல் கட்டப்பட்டது. கோயிலில் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் நடனக்காட்சிகள், போர்க்காட்சிகள், மதநிகழ்வுகள், ரிஷிகள், விலங்குகள், கற்பனை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.இக்கோயிலின் சிறப்பானது சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் சிறப்பிக்கப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களைச் சிற்பங்களாகச் செதுக்கி வைத்துள்ளதே ஆகும். அநபாயச்சோழன் என்று அழைக்கப்படும் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் சேக்கிழாரைக் கொண்டு அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பெரியபுராணத்தை இயற்றினார். அவரது மைந்தனான இரண்டாம் இராஜராஜ சோழன் அவர்களைச் சிற்பங்களாக இக்கோயிலில் செதுக்கிவைத்துள்ளார். தமிழகச் சைவக் கோயில்களில் தாராசுரத்தில் மட்டுமே அறுபத்துமூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் முழுத்தொகுப்பாக காணப்படுகின்றன. தாராசுரம் தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாட்டினைப் பறைசாற்றும் எத்தனயோ சின்னங்களில் இதுவும் ஒன்று. 

விண்வெளி சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?

விண்வெளிக்குச் செல்வது என்பது இதுவரை நீண்டகால பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்களால் மட்டுமே சாத்தியமாக இருந்தது. 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ரஸ்யாவைச் சேர்ந்த யூரி காகரின் என்ற விண்வெளி வீரர்தான் வொஸ்ரொக் என்ற விண்கலத்தில் முதலாவதாக புவியீர்ப்பைக் கடந்து விண்வெளி சென்று திரும்பி வந்தார். இரண்டு வருடங்களின் பின் 1963 ஆம் ஆண்டு வலன்ரீனா ரெரஸ்கோவா என்ற ரஸ்ய பெண்மணியே விண்வெளிக்குச் சென்ற முதலாவது பெண்மணியானார். சுமார் 60 வருடங்களுக்கு முன் இப்படியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட விண்வெளிப் பயணம் இன்று வளர்ச்சி அடைந்து பயிற்சி பெறாத சாதாரண பயணிகள்கூட விண்வெளிக்குச் செல்லலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் மற்றும் ப்ளு ஒரிஜின் நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களும் விண்வெளிக்கு உல்லாசப் பயணிகளைக் குறைந்த செலவில் கொண்டு செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. விண்வெளிப் பயணங்களைத் தொடர்ந்து, விரைவில் கிரகங்களுக்கான சுற்றுலாப் பயணங்களும் நடைபெற இருக்கின்றன.

ஒரே நேர்கோட்டில்...

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், சரியாக புவியிடைக்கோடு (30.7352° N, 79.0669) இல் அமைந்துள்ளது. கேதார்நாத்திலிருந்து 221 கி.மீ தூரத்தில் ரிஷிகேஷ் ரயில் நிலையம், அடுத்து 14 கி.மீட்டர் தள்ளி உள்ள காலேஷ்வரம் இவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் அரிதாக அமைந்துள்ளது.

திபெத்தில் புல்லட் ரயில் சேவை

திபெத்தில் வரலாற்றிலேயே முதன்முறையாக சுமார் ரூ.4181 கோடி மதிப்பில் புல்லட் ரயில் சேவை கடந்த ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. தலைநகர் லாசாவில் தொடங்கி  Nyingchi நகர் வரையிலான 250 மைல் நீளமுள்ள இந்த எலெக்ட்ரிக்கல் ரயில்தடம் 47 சுரங்க வழித்தடங்கள், 121 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்கிறது. மேலும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 9840 அடி உயரத்திலேயே பெரும்பாலும் இந்த தடம் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரயிலில் தானியியங்கி முறையில் கோச்களுக்குள் இருக்கும் ஆக்ஸிசன் அளவை கண்டறியும் தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

birds

தொலை தூரத்தில் இருந்து வலசை வரும் பறவைகள் வானில் கூட்டமாக பறப்பதை பார்த்திருப்போம். அவை பெரும்பாலும் ஆங்கில 'V'வடிவில் பறப்பதை காணலாம்.. அது ஏன் அவ்வாறு பறக்கின்றன.. அவ்வாறு 'V' வடிவில் பறப்பதால் அவை ஆற்றலை சேமிக்கின்றன..தனியாக பறக்கும் பறவை காற்றால் பின்னுக்கு இழுக்கப்படும் விசையிலிருந்து, இவ்வாறு கூட்டமாக 'V' வடிவில் பறக்கும் போது அது தடுக்கப்படுகிறது... இதனால் அவற்றால் வெகு தொலைவுக்கும், இலகுவாகவும் பறக்க முடிகிறது.. மேலும் சக பறவைகளை எந்த நிலையிலும் பார்க்க முடிவதால் பாதுகாப்பாகவும் பின்தொடர முடிகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago