முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இயற்கையின் அதிசயம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே சிசிபு நகர் அருங்காட்சியகத்தில் மனித முகங்களுடன் கூடிய பாறைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அந்த பாறைகளில் மனித முகங்கள் செயற்கையாக செதுக்கப்படவில்லை. இயற்கையாகவே உருவான மனித முக பாறைகள் சேகரித்து அங்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கண்காட்சியில் 1700 மனித முக பாறைகள் உள்ளன. சில முகங்கள் அழுத நிலையிலும், சிரித்த நிலையிலும் உள்ளன. சில பாறைகள் வாயை பிளந்த நிலையிலும், மற்றவை சிந்தனை மற்றும் கவலையில் ஆழ்ந்த நிலையிலும் இருப்பது போன்று உள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக இவ்வகை பாறைகள்  சேகரிக்கப்பட்டன.

மொபைல் அரக்கன்

செல்ஃபோனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்களுக்கும், புற்று நோய்க்கும் பலமான தொடர்பு உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்த கதிர்வீச்சு மூளையில் புற்று நோயை உண்டாக்கும் என்றும் குழந்தைகள் தொடர்ந்து இந்த கதிர்வீச்சில் தாக்கப்பட்டால் லுக்கீமியா வருவதற்கு சாத்தியங்கள் உள்ளன எனவும் தெரிய வந்துள்ளது.

காற்றே எரிபொருள்

அழுத்தப்பட்ட காற்றினை எரிசக்தியாகக் கொண்டு இயங்கும் காரினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஏர்பேட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தவகை கார்கள் மணிக்கு 65 கி.மீ. அதிகபட்ச வேகத்தில் செல்லும். இந்த காரில், 200 கி.மீ. தூரம் பயணிக்க ரூ.70 மட்டுமே செலவாகும் என்பது சிறப்பம்சம்.

மைக்ரோசாப்ட் முடிவு

பெயிண்ட் பிரஷ் என்ற பெயரில் கடந்த 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 32 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பெயிண்ட் கிராபிக்ஸ் செயலிக்கு பதில் பெயிண்ட் 3டி அறிமுகப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  இது பெயிண்ட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெயிண்ட் செயலி படங்கள் வரைவதற்கும், புகைப்படங்களை எடிட் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

நாம் வீசியெறியும் ஆடைகள் மட்க எத்தனை ஆண்டுகள் தேவை?

உலகம் முழுவதும் நாகரிகமடைந்த மனிதர்கள் ஆடைகளை அணிய தொடங்கினர். அதுவும் தற்போது டிசைன் டிசைனாக ஆடைகளை அணிந்து தள்ளுகிறோம். உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான டெக்ஸ்டைல் கழிவுகளை வெளியேற்றுகிறோம். நாம் அணியும் ஆடைகள் மட்கி போக எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள் எவ்வளவு தெரியுமா...40 ஆண்டு காலம் ஆகுமாம். பெரும்பாலான உடைகள் சாயங்களாலும், ரசாயனங்களாலுமே நிறமேற்றப்படுவதால் அவை நிலத்தை விஷமாக்குகின்றன.

மிகவும் அரிய வகை இளம் சிவப்பு நிற வெட்டுக்கிளி

மிகவும் அரிய வகை இளம் சிவப்பு நிற வெட்டுக்கிளி அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸ் மாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் ஆய்வாளரான டிர்க் பார்க்கர் என்ற 33 வயது இளைஞர் இதை கண்டுள்ளார். அவருக்கு தொடக்கத்தில் இது எத்தனை அரியது என்பது தெரிந்திருக்கவில்லை. பின்னர் பூச்சி இனங்கள் தொடர்பாக கூகுளில் தேடிய போதுதான் இது அரிய வகை என்பது தெரியவந்தது என்கிறார். மரபணுவில் ஏற்படும் எரித்ரிசைம் என்பதன் காரணமாக இந்த நிற மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது அதை தனது வீட்டில் செல்லப்பிராணியாக வைத்திருக்கிறார் பார்க்கர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago