Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விவிஐபி மரம்

மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி புத்தர் காம்ப்ளக்சுக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் விவிஐபி மரம் என கருதப்படும் அரசமரம் ஒன்று உள்ளது. இந்த புகழ்பெற்ற மரத்தை பேணிக் காக்க ஆண்டுதோறும் 12 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது  அந்த மாநில அரசு.இந்த மரத்தை சுற்றி பாதுகாப்பு வளையங்களும், 4 காவலர்களும் பாதுகாப்பு பணியி்ல் எப்போதும் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்மார்ட் வாட்ச்

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடிப்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கனவாக இருந்தது. இதற்கு வடிவம் கொடுக்கும் நவீன சென்சார்களைத்தான் ஆப்பிள் நிறுவன பயோமெடிக்கல் என்ஜினியர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.

சீனாவில் பாரம்பரிய மிலு ரக மான்கள் அழிவிலிருந்து மீட்பு

சீனாவில் மிலு இன மான்கள் ஏறக்குறைய அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன இலக்கியங்களில் மிலு மான்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சீனாவின் தனித்துவம் வாய்ந்த விலங்குகளில் இவ்வகை மான்களும் அடங்கும். கிட்டத்தட்ட 1900 ஆம் ஆண்டுகளில் இந்த மான் இனமே அழிந்து போயின. போர்கள், பேரிடர்கள், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த மான்கள் அழிந்தன. இவற்றின் இனத்தை மீண்டும் பெருக்க முடிவு செய்த சீன அரசு 1985 இல் மீண்டும் பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெறும் 22 மான்கள் மட்டும் விமானம் மூலம் பிரிட்டனிலிருந்து சீனாவுக்கு கொண்டு வரப்பட்டன. கடந்தாண்டுகளில் சீனா அரசின் முயற்சியால் அவை தற்போது 8 ஆயிரம் வரை பெருகியுள்ளன. நாடு முழுவதும் உள்ள 40 பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் தற்போது அவை விடப்பட்டு அந்த மிலு இன மான்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை ஏரிகளிலும், புல்வெளிகளிலும் துள்ளி குதித்து ஓடும் அழகிய காட்சிகள் நெஞ்சை அள்ளுபவையாக உள்ளன.

உலகில் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான பூ மீண்டும் தோன்றியது

சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான பூ ஒன்று மீண்டும் 2020 ஆம் ஆண்டில் தன்னை இந்த பூமிக்கு வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. அதன் பெயர் Valviloculus pleristaminis என்பதாகும். ஆஸ்திரேலியாவின் மென்மையான தோற்றமுடைய பிளாக்ஹார்ட் சஸ்ஸாஃப்ராஸ் மலருடன் தொடர்புடையது. இது ஒரு கண்ட திட்டிலிருந்து மற்றொரு கண்ட திட்டுக்கு இடம் மாற்றமாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவிலிருந்து 4000 தொலைவில் உள்ள தென்கிழக்கு ஆசிய பகுதியான மியான்மரின் இந்த மலர் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் விட்டம் 2 மிமீ. இதன் மையத்தில் சுமார் 50 மகரந்த மொட்டுகள் சுழல் வடிவில் அமைந்திருக்கும்.  இவை கண்டம் தாண்டி சென்றது ஆச்சரியம் தானே..

நம்மீது பிரியம்

 விலங்குகளைப் போன்ற தடிமனான ரோமங்கள் மனிதர்களுக்கு கிடையாது. இதனால்தான், அவைகள் நம்மை கடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களுக்கு நோயின் அச்சுறுத்தலைக் கூட்டுவது பெண் கொசுக்கள் தான் என்றும்,ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

தீக்குச்சிகள் எப்போது பயன்பாட்டுக்கு வந்தன

பழங்கால மனிதன் தீயைக் கண்டுபிடித்தபோதே முதல் தீக்குச்சி வடிவமைக்கப்பட்டதாகக் கருதலாம். தற்காலத் தீக்குச்சிகள், குறைவான வெப்ப நிலையிலேயே தீப்பிடித்துக்கொள்ளும் பாஸ்ஃபரஸ் (phosphorus) கண்டறியப்பட்ட பின்னர் உருவானவை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாஸ்ஃபரஸைப் பயன்படுத்திப் பல்வகை வடிவிலான தீக்குச்சிகள் வடிவமைக்கப்பட்டன.முதலாவது பாதுகாப்பான தீக்குச்சிப் பெட்டிகள் (safety matches) 1844ஆம் ஆண்டு ஸ்வீடனில், நச்சுத் தன்மையற்ற சிகப்புப் பாஸ்ஃபரஸைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டன. தீப்பிடித்து எரிவதற்குத் தேவையான எல்லா வேதிப்பொருட்களையும் தீக்குச்சியின் தலைப் பகுதியில் சேர்க்காமல், சிகப்புப் பாஸ்ஃபரஸை பக்கவாட்டுச் சுவர்ப் பகுதியில் பூசி, தீக்குச்சியை அதில் உராயச் செய்து தீயை உண்டாக்கும் வகையில் தீப்பெட்டி செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago