முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இட்லி மஞ்சூரியன்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

இட்லி மஞ்சூரியன் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. இட்லி – 2.
  2. வெங்காயம் – 1.
  3. பூண்டு – 5 பல்.
  4. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்.
  5. தனியா தூள் – 1 ஸ்பூன்.
  6. பச்சை மிளகாய் – 2.
  7. தக்காளி - 1.
  8. மைதா மாவு - 1 ஸ்பூன்.
  9. கான்ப்ளார் மாவு - 1 ஸ்பூன்.
  10. தக்காளி சாஸ் - 1 பாக்கெட்.
  11. உப்பு -  1 ஸ்பூன்.
  12. எண்ணெய் - 200 மில்லி.

 

Method: 

 

இட்லி மஞ்சூரியன் செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் மைதா மாவு,1 ஸ்பூன் கான்ப்ளார் மாவு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. 2 இட்லியை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. வெட்டி வைத்த இட்லி துண்டுகளை கரைத்து வைத்துள்ள மைதா மற்றும் கான்ப்ளார் மாவு கரைசல் உள்ள பாத்திரத்தில் போட்டு கலந்து ஊற விடவும்.
  4. நன்கு ஊறிய பின்னர் இட்லி துண்டுகளை பிழிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  5. மிக்சியில் ஒரு நறுக்கிய தக்காளி, 2 பச்சை மிளகாய்யை போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  6. அடுப்பில் பாத்திரத்தை வைத்து நன்கு காய்ந்த உடன் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.
  7. எண்ணெய் சூடானவுடன் பிழிந்து வைத்துள்ள இட்லி துண்டுகளை எண்ணெயில் போட்டு  பொரிக்கவும், இப்போது அடுப்பை சீம்ல் வைத்து பொன்னிறமாக பொரிக்கவும் திருப்பி போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.
  8. அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.நன்கு காய்ந்த உடன் சிறிதளவு எண்ணெய் விடவும். இப்போது எண்ணெய் சூடாகி விட்டது.
  9. பொடியாக நறுக்கிய  5 பல் பூண்டு, பொடியாக நறுக்கிய  ஒரு வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
  10. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 ஸ்பூன் தனியா தூள் போட்டு வதக்கவும்.
  11. மிக்சியில் அரைத்து வைத்த தக்காளி மற்றும் பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.
  12. தேவையான அளவு உப்பு போட்டு, சிறிதளவு தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.
  13. இதனுடன் பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.
  14. சிறிதளவு புதினாவை நறுக்கி போடவும்.
  15. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  16. சுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago