முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காளான் குருமா

Cooking time in minutes: 
20
Ingredients: 
காளான் குருமா செய்யத் தேவையான பொருள்கள்;
 1. காளான் - 1/4 கிலோ.
 2. முந்திரி பருப்பு - 50 கிராம்.
 3. எண்ணெய் -  5 டீஸ்பூன்.
 4. தேங்காய் - 1/2 மூடி.
 5. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1. 
 6. பொடியாக நறுக்கிய தக்காளி – 1.
 7. 5 பச்சை மிளகாய் - 5.
 8. சின்ன வெங்காயம் - 10.
 9. நெய் - 1 டீஸ்பூன். 
 10. மல்லி - 1 டேபிள் ஸ்பூன்.
 11. பட்டை - 6 கிராம்.
 12. கிராம்பு - 6.
 13. சோம்பு -1 1/2  டீஸ்பூன்.
 14. சீரகம்- 1 1/2  டீஸ்பூன்.
 15. கசாகசா -  1 டீஸ்பூன்.
 16. லவங்கம் – 1.
 17. ஏலக்காய் – 1.
 18. பிரியாணி இலை – 1.
 19. பூண்டு - 10.
 20. இஞ்சி - சிறிதளவு. 
 21. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு.
 22. உப்பு - தேவையான அளவு. 
Method: 

செய்முறை ;

 1. 1/2 மூடி தேங்காய்யை துருவி தேங்காய் துருவலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும். .
 2. அடுப்பில் கடாய் வைத்து,கடாய் சூடானவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் மல்லியை போட்டு வறுக்கவும்.
 3. இதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி 5 கிராம் பட்டை, 4 கிராம்பு, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் கசாகசா போட்டு வறுக்கவும்.
 4. இதனுடன் 5 பச்சை மிளகாய், 10 சின்ன வெங்காயம்,10 பல் பூண்டு,சிறிதளவு  இஞ்சி, 50 கிராம் முந்திரி பருப்பு மற்றும் 1/2 மூடி தேங்காய் துருவலை போட்டு நன்றாக கலந்து விடவும்.
 5. வறுத்த மசாலா பொருட்களை சிறிது நேரம் ஆற விட்டு ஒரு மிக்சி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
 6. அடுப்பில் கடாய் வைத்து 4 டீஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்,
 7. எண்ணெய் சூடானவுடன் 2 பட்டை, 2 கிராம்பு, ஒரு லவங்கம், ஒரு ஏலக்காய், 1/2 டீஸ்பூன் சோம்பு,  1/2 டீஸ்பூன் சீரகம், ஒரு பிரியாணி இலை போட்டு வறுக்கவும்.பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
 8. இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி,1/4 கிலோ சுத்தம் செய்த காளான்,ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி கிளறி விடவும்.
 9. இதனுடன் மிக்சியில் அரைத்த மசாலா விழுதுகளை போட்டு கிளறி விடவும்.
 10. இதனுடன் ஒரு டம்ளர்  தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு 3 நிமிடம் மூடி போட்டு மூடி வேக விடவும்.
 11. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
 12. சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.
 13. சுவையான காளான் குருமா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony