முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தனியா பன்னீர்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

தனியா பன்னீர் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பன்னிர் - 100கிராம்.
  2. கொத்தமல்லி  -1 கட்டு.
  3. பூண்டு - 50 கிராம்.
  4. பெரிய வெங்காயம் - 100 கிராம்.
  5. பச்சை மிளகாய் - 8
  6. தக்காளி -1.
  7. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்.
  8. சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்.
  9. மல்லி தூள் -1 ஸ்பூன்.
  10. இஞ்சி - 5 கிராம்.
  11. உப்பு - தேவையான அளவு.
  12. தயிர் - சிறிதளவு.
  13. ரீபைன்ட் ஆயில் - 3 ஸ்பூன்.
  14. அமுல் கிரீம் 1 ஸ்பூன்.

 

Method: 

 

செய்முறை ;

  1. ஒரு கட்டு கொத்தமல்லியை எடுத்து கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மிஸ்சி ஜாரில் போடவும்,இதனுடன் 5 பச்சை மிளகாய்யை போட்டு மிஸ்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து  3 ஸ்பூன் ரீபைன்ட் ஆயில் உற்ற வேண்டும்.எண்ணெய் சூடானவுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் 100 கிராம், நறுக்கிய பூண்டு 50 கிராம், மற்றும் நறுக்கிய 3 பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.
  3. நறுக்கிய தக்காளி ஒன்று,மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,சீரகத்தூள் 1/2 ஸ்பூன், மல்லித்தூள் ஒரு ஸ்பூன்,போட்டு வதக்கவும்.
  4. தயார் செய்து வைத்துள்ள கொத்தமல்லி விழுது 4 ஸ்பூன், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  5. இதனுடன் 100 கிராம் பன்னீர் சேர்த்து கலந்து விடவும்.
  6. 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும்.
  7. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  8. பொடியாக  நறுக்கிய மல்லியை போடவும்.
  9. தேவையெனில் அமுல் கிரீம் ஒரு ஸ்பூன் ஊற்றவும் .
  10. சுவையான தனியா பன்னீர் ரெடி.

 

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்