முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முட்டைகோஸ் மன்சூரியன்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

முட்டைகோஸ் மன்சூரியன் செய்யத்தேவையான பொருட்கள்.

  1. முட்டைகோஸ் - 1/4 கிலோ.
  2. கேரட் - 1.
  3. கரம் மசாலா - 1 ஸ்பூன்.
  4. இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
  5. மிளகாய்  தூள் - 1 ஸ்பூன்.
  6. மைதா மாவு - 4 ஸ்பூன்.
  7. கான் பிளவர் மாவு - 5 ஸ்பூன்.
  8. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  9. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1.
  10. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
  11. பொடியாக நறுக்கிய பூண்டு - 4 பல்.
  12. நீளமாக  நறுக்கிய குடைமிளகாய் - 1/2.
  13. சோம்பு  தூள் - 1/2 ஸ்பூன்.
  14. மஞ்சள்  தூள் - 1/4 ஸ்பூன்.
  15. மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
  16. ரெட் சில்லி சாஸ் - 1 ஸ்பூன்.
  17. சோயா சாஸ் - 1 ஸ்பூன்.
  18. வினிகர் - 1/2 ஸ்பூன்.
  19. தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்.
  20. பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு.
  21. உப்பு தேவையான - அளவு.

 

Method: 

செய்முறை ;--  

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய 1/4 கிலோ முட்டைகோஸ்,பொடியாக நறுக்கிய ஒரு கேரட்,கரம் மசாலா ஒரு ஸ்பூன்,மற்றும் தேவையான  அளவு உப்பு போட்டு  நன்றாக கலந்து விடவும்.

இதனுடன் இஞ்சி,பூண்டு விழுது  ஒரு ஸ்பூன்,மிளகாய்  தூள்  ஒரு ஸ்பூன்,மைதா மாவு  4 ஸ்பூன்,கான் பிளவர் மாவு 4  ஸ்பூன் போட்டு  நன்றாக கலந்து விட்டு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.

எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை ஓவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு  எண்ணெய்யை ஊற்றவும்.

எண்ணெய்  சூடானவுடன் பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,பொடியாக நறுக்கிய 4 பல் பூண்டு மற்றும் நீளமாக  நறுக்கிய 1/2 குடைமிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

இதனுடன் சோம்பு தூள் 1/2 ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்,மிளகு தூள் 1/2 ஸ்பூன்,ரெட் சில்லி சாஸ் ஒரு ஸ்பூன்,சோயா சாஸ் ஒரு ஸ்பூன்,வினிகர் 1/2 ஸ்பூன் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்கவும்.

இதனுடன் ஒரு ஸ்பூன் கான் பிளவர்மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கலந்து விட்டு எண்ணெயில் பொறித்த முட்டைகோஸ் உருண்டைகளை போட்டு கலந்து விடவும்.

இதனுடன் சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை போட்டு கலந்து விடவும்.

இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.

சுவையான முட்டைகோஸ் மன்சூரியன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்