முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உடல் மற்றும் முகம் அழகு பெற சித்த வைத்திய குறிப்புகள்

Image Unavailable

 1. மேனி நிறம் பொன்நிறமாக ;- மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி 5கிராம் அளவு 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
 2. தேகம் பொன்னிறமாக;- ஆவாரம் பூ தொடர்த்து சாப்பிடலாம்.
 3. முகம் பளபளக்க ;- நாட்டு வாழைப்பழம் பழுத்தபழம் ஒன்றை எடுத்து ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்
 4. முகச்சுருக்கம் மறைய ;-முட்டை கோஸ் சாறை முகத்தில் தடவி வரலாம்.
 5. உடல் மினுமினுப்பாக ;-இரவில் படுக்க போகும் முன் தேன்,குங்குமப்பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.
 6. உடல்நிறம் பளபளக்க ;-அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூள் ஆக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வரலாம்
 7. உடல் வனப்பு உண்டாக ;-முருங்கை பிசினை பொடிசெய்து அரை ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
 8. முகம் வசீகரமாக;-சந்தன கட்டையை எலுமிச்சை சாறில் உரைத்து பூசலாம்.
 9. முகம் பிரகாசமடைய;-கானாவாழை மற்றும் மாவிலையை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அந்த நீரை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நெரம் கழித்து முகத்தை கழுவவும்.
 10. மேனி பளபளப்பு பெற ;-ஆரஞ்சு பழத்தை தொடர்த்து சாப்பிட்டு வரலாம்.
 11. தோல் வழவழப்பாக;மருதாணி இலையை அரைத்து கருப்பான தோல் உள்ள பூசி வந்தால் தோலின் கருப்பு நிறம் மாறும்.
 12. உடல் சிகப்பாக மாற;-வெள்ளரிக்காய்,மஞ்சள் மற்றும் வேப்பம்பூ ஆகியவற்றை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர குணமாகும்.
 13. உடம்பு பொலிவு பெற;-கோரை கிழங்கு பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடம்பு பொலிவு உண்டாகும்.
 14. முகம் அழகு கூட;-அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடிகட்டி பின் வெல்லம் சேர்த்து பருகி வர உடலழகும் முக அழகும் கூடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony