முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பாம்பு கடி,தேள் கடி | வண்டு பூச்சி கடிக்கு | பூரான் கடி விஷம் முறிய | கம்பளி பூச்சி கடிக்கு | நாய்க்கடி விஷம்

siddha-4

  • விஷக்கடி,சொறி தீர ;-- ஆடு தின்னாபாளை இலையை பொடி செய்து வெந்நீரில் குடிக்கலாம்.
  • பாம்பு நஞ்சு ;--ஆடு தின்னாபாளை வேரை அரைத்து கொடுக்கலாம்.
  • பாம்பு கடி,தேள் கடி ;-- ஈஸ்வர மூலி இலையை கசக்கி கடிபட்ட இடத்தில் தேய்க்கலாம்.
  • பாம்பு கடித்தவர்களுக்கு ;-- எருக்க இலையை அரைத்து ஒரு கிராம் அளவு கொடுக்கலாம்.
  • நாய்க்கடி விஷம் ;-- ஊமத்தை இலையை அரைத்து நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம்.
  • பாம்பு நஞ்சு முறிய;-- பீச்சங்கு இலைச்சாறு 100 மில்லி குடிக்கலாம்.
  • தேள் விஷம் இறங்க ;-- நாயுறுவி இலையை கசக்கி தேய்க்கலாம்.
  • பாம்பு தீண்டியவர்களுக்கு ;-- தும்பை இலைச்சாறு கொடுக்க பேதியாகும்,3 நாள் தூங்காமல் உப்பு சப்பில்லாமல் சாப்பிட வேண்டும்.
  • விஷக்கடிகள் முறிய ;-- பாதாள மூலி வேரை பொடி செய்து 5 கிராம் சாப்பிடலாம்.
  • விஷக்கடி தீர ;-- மாவிலங்கப்பட்டையை கஷாயம் செய்து காலை மாலை சாப்பிட்டு வரலாம்.
  • நஞ்சுக்கடி தீர ;-- உத்தாமணி என்ற வேலிப்பருத்தி வேரை பாலில் அரைத்து குடிக்கலாம்.
  • எந்த விஷக்கடியானாலும்;-- பூண்டை அரைத்து கடிவாயில் கட்டலாம்.
  • எலிக்கடி விஷம் முறிய ;-- விளாமரத்தின் பூக்களை சுத்தம் செய்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து  வடிகட்டி சாப்பிட வேண்டும்.
  • வண்டு பூச்சி கடிக்கு ;-- வெள்ளைப்பூண்டை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும்.
  • விஷக்கடிக்கு ;-- கடிவாயில் வெங்காயம் நறுக்கித் தேய்க்க வலி குறையும்.
  • பூரான் கடி விஷம் முறிய ;-- தும்பை இலைச்சாறை பூசலாம்.
  • வெறிநாய்கடி குணமாக ;-- நாயுருவி வேரை அரைத்து கோலிக்குண்டு அளவு உருட்டி 15 நாட்கள் சாப்பிடலாம்.
  • விஷம் ;-- எருக்கன் பாலை நாய் கடித்த இடத்தில் வைக்க விஷம்ஏறாது.
  • நாள்பட்ட விஷக்கடிக்கு ;-- வெற்றிலையும்,மிளகும் சேர்த்து அரைத்து 2 கிராம் உட்கொள்ள விஷத்தன்மை மாறும்.
  • தேனி கொட்டினால் ;-- பழைய புளி,சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து அதை கொட்டு வாயில் அழுத்தி ஓட்ட வைத்து விட்டால் கடுப்பு நின்று விடும்.
  • உடம்பில் விஷம் உள்ளதா என அறிய ;-- ஆடு திண்டா பாளை வேரை வாயில் போட்டு மெல்ல செய்தால் அதன் சுவை கசந்தால் விஷம் இல்லை எனலாம்.
  • பாம்புக்கடி விஷம் இறங்க ;-- எருக்கஞ்செடியின் பிஞ்சு இலைகளை 2 அல்லது 3 இலைகளை  மென்று தின்றால் விஷம் இறங்கும்.
  • பாம்பு பூரான் கடி ;-- அவுரி வேர்,அருகம்புல் மற்றும் மிளகு சேர்த்து அரைத்து கொடுக்கலாம்.
  • விஷக்கடி குணமாக ;-- பூண்டு அரைத்து கட்ட விஷம் இறங்கும்.
  • சிலந்தி கடி;-- கற்றாழையை வைத்து கட்டினால் குணமாகும்.
  • கம்பளி பூச்சி கடிக்கு;-- வெற்றிலையை கடிவாயில் வைத்து அழுத்தி தேய்க்க குணம் பெறலாம்.
  • தேள்கடிக்கு ;-- நாயுருவி வேரை பச்சையாக மென்று சாரை விழுங்கினாள்  விஷம் நீங்கும்.
  • தேள்கொட்டிய வலிகுறைய ;-- கடிவாயில் பாச விதைகளை எருக்கம் பால் ஊற்றி மைய அரைத்து போட வலி குறையும்.
  • விஷம் முறிய ;-- விளாம்பழத்தை ஓட்டுடன் அரைத்து காலையில் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.
  • பாம்புகடி விஷம் ;-- கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் மோரில் கலந்து குடித்தல் விஷம் இறங்கும்.
  • பாம்புகடி விஷம் முறிய  ;-- ஆடு தீண்டா பாளை வேரை எடுத்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
  • பூரான்கடி விஷம் நீங்க ;-- குப்பைமேனி,உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட குணமாகும்.
  • வெறிநாய்கடி குணமாக ;-- நாயுருவி வேரை அரைத்து போதிய அளவில் உருட்டி 15 நாட்கள் சாப்பிடவும்.
  • தேள்,பாம்பு விஷம் ;-- தும்பை இலைசாறை  உட்கொள்ளலாம்.
  • தேள்கடி விஷம் ;-- நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொள்ளலாம்.
  • விஷக்கடிகள் முறிய ;-- பாதாளமூலி வேரை பொடி செய்து 2 கிராம் சாப்பிட விஷக்கடிகள் முறியும்.
  • நஞ்சுகடி விஷம் முறிய ;-- பொன்னாவரைவேர் கஷாயம் குடிக்க நஞ்சுகடி விஷம் முறியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago