முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக

siddha-1

 • வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் பூச்சிகள் அழிய ;-- பாகற்காய் கொடி இலையை சாறு பிழிந்து உட்கொள்ள வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் பூச்சிகள் அழியும்.
 • வயிற்று பூச்சிகள் ஒழிய ;-- வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் ஒரு கரண்டி தேன் கலந்து காலை,மாலை 2 வேளை சாப்பிட தொந்தரவு தீரும்.
 • வயிற்றுப்பூச்சிகள் ஒழிய ;-- அன்னாசிபழத்தை தினமும் சாப்பிடலாம்.
 • வயிற்றுப்புழுக்கள் வெளியேற  ;-- எருக்கம் இழைச்  சாறு 3 துளியை எடுத்து 10  துளி தேனில் கலந்து கொடுக்கலாம்.(குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது)
 • குடல் புண் குணமாக ;-- அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால்  குடல் புண் குணமாகும்.
 • வயிற்றுப்பூச்சிகள் ;-- பப்பளிப்பாலை விளக்கெண்ணையில் கலந்து குடிக்க நீங்கும்.
 • குடல் புழுக்கள் அழிய ;-- மாதுளம் பழத்தை சாப்பிடலாம்.
 • வயிற்றுப்பூச்சி அழிய ;-- வெங்காய பூவை அடிக்கடி உணவுடன் பயன்படுத்தி வரலாம்.
 • குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர ;-- வேலிப்பருத்தி வேர் 4 சிட்டிகையை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
 • நுண்புழுக்கள் அழிய ;-- மணலிக்கீரையை உண்டு வரலாம்.
 • நாக்கு பூச்சி நீங்க ;-- குப்பைமேனி  வேர் பொடியை கஷாயம் செய்து குடிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்