முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் போட்டியிட்டு வெற்றி: பீகாரில் இளம் வயது எம்.எல்.ஏவான நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர்..!

சனிக்கிழமை, 15 நவம்பர் 2025      இந்தியா      அரசியல்
Mythili-2025-11-15

பாட்னா, பீகார் மாநில தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு 25 வயதே ஆன நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர் வெற்றிப்பெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ளார்.

பீகாரின் மாதுபானியில் பிறந்த மைதிலி தாகூர், பின்னர் குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வந்தார். பிரபல நாட்டுப்புற பாடகியான மைதிலிக்கு, கடந்த ஜூன் மாதம்தான் 25 வயது ஆனது. பீகாரில் சட்டசபை தேர்தல் அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு பா.ஜனதாவில் சேர்ந்து, தர்பங்கா மாவட்டத்தின் அலிநகர் தொகுதியில் போட்டியிட்டார். இளம் வேட்பாளர் என்ற ரீதியிலும், பிரபலம் என்ற வகையிலும் இந்த தேர்தலில் கவனிக்கப்படும் வேட்பாளராக இருந்தார்.

அதேநேரம் மாநிலத்துக்கு வெளியே வசிப்பவர் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது இருந்தது. எனினும், தான் பீகார்வாசி எனவும், அலிநகர் தொகுதியில் வீடு வாங்கி வசிப்பேன் என்றும் தன்னை விமர்சித்தவர்களுக்கு பிரசாரத்தில் பதிலடி கொடுத்தார். தேர்தல் முடிவுகள் நேற்று  முன்தினம் வெளியான நிலையில், மைதிலி தாகூர் அலிநகர் தொகுதியில் அபார வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரீய ஜனதாதள மூத்த தலைவர் பினோத் மிஸ்ராவை 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இதன் மூலம் பீகார் சட்டசபையின் இளம் எம்.எல்.ஏ. என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2005-ம் ஆண்டு வெற்றி பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ. தவுசீப் ஆலம், 2015-ம் ஆண்டு வெற்றி பெற்ற ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி ஆகியோர்தான் (26 வயது) மாநிலத்தில் இளம் எம்.எல்.ஏ.க்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து