எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்.ஐ.ஆர்.) நடந்து வருகிறது. தமிழகத்திலும் இந்த பணி தொடங்கி நடந்து வருகிறது. வீடு, வீடாக ஊழியர்கள் விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள். ஆனால், இந்த சிறப்பு திருத்த பணியில் குழப்பங்கள் இருப்பதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. இந்த தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்து போராடி வருகின்றன.
அந்த வகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க. சார்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது. மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் தலைமை தாங்குகிறார்கள். சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்க இருக்கிறார். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக த.வெ.க. மாவட்ட செயலாளர்களுக்கு இ-மெயில் மூலம் உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கியுள்ளது.
குறிப்பாக, போலீசார் அனுமதி அளிக்கும் இடத்தில் மட்டும்தான் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும், எக்காரணத்தை கொண்டும் பொதுமக்களுக்கும், சாலை போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்ட விவரங்களை உடனுக்குடன் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


