முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் சட்டப்பேரவை தேர்தல்: பா.ஜ.க.வுக்கு முதல்வர் பதவி

சனிக்கிழமை, 15 நவம்பர் 2025      இந்தியா
Bihar-Assembly

பாட்னா, தேசிய ஜனநாயக கூட்டணி அசுர பலத்துடன் காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை தக்கவைத்துள்ளது.

பீகாரில் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் திருவிழா களைகட்டியது. ஆனால் பல மாதங்களுக்கு முன்னரே பீகார் தேர்தல் நாடு முழுவதும் கவனிக்கும் ஒரு நிகழ்வாக மாறி இருந்தது. இதற்கு பிரதான காரணமாக அமைந்தது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம். தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த எதிர்ப்பையும் மீறி வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்து இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 68 லட்சத்துக்கு அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சலசலப்புக்கு மத்தியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், பீகார் தேர்தல் களம் சூடுபிடித்தது.

மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதாதளம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக களத்தில் இறங்கியது. கூட்டணியின் பிரதான கட்சிகளாக பா.ஜனதாவும், ஐக்கிய ஜனதாதளமும் மொத்தமுள்ள 243 இடங்களில் தலா 101 இடங்களில் போட்டியிடுவது என முடிவு செய்தன. 

சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 29 இடங்கள் வழங்கப்பட்டன. இதைத்தவிர இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிகளுக்கு தலா 6 இடங்கள் என தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்தன. அத்துடன் மாநிலத்தில் சூறாவளி பிரசாரத்தை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முன்னெடுத்தனர்.

முதல்வர்  நிதிஷ் குமார், துணை முதல்வர்  சாம்ராட் சவுத்ரி உள்ளிட்ட மாநில தலைவர்களும், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில பா.ஜனதா முதல்வர் கள் என தேசிய தலைவர்களும் தீவிர பிரசாரத்தை மேற்கொணடனர். மறுபுறம் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மெகா கூட்டணியும் (இன்டியா கூட்டணி) பீகாரில் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர பகீரத பிரயத்தனம் செய்தது. இந்த கூட்டணியின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் இடையே முதலில் இருந்த இணக்கம், தொகுதிப்பங்கீட்டில் எதிரொலிக்கவில்லை. இதனால் இரு கட்சிகளும் தன்னிச்சையாக தொகுதிகளை பங்கிட்டுக்கொண்டன.

அதன்படி ராஷ்டிரீய ஜனதாதளம் 143 இடங்களிலும், காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் களமிறங்கின. இந்த கூட்டணியில் இடம்பெற்ற பிற கட்சிகளான மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு 20, விகாஷீல் இன்சான் கட்சி 12, இந்திய கம்யூனிஸ்டு 9, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 4 உள்ளிட்ட பிற கட்சிகளும் போட்டியிட்டன. தொகுதிப்பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறிகளால் மெகா கூட்டணி கட்சிகள் பல தொகுதிகளில் தங்களுக்குள்ளே நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலையும் உருவானது.

இறுதியில் மொத்தமுள்ள 243 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி சரித்திர வெற்றி பெற்றது. இதன் மூலம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. கூட்டணியில் பா.ஜனதா கட்சி 89 இடங்களை கைப்பற்றி மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. ஐக்கிய ஜனதாதளம் 85, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா 4 இடங்களை கைப்பற்றி இருந்தன. பீகார் துணை முதல்வர்  சாம்ராட் சவுத்ரி மற்றும் நிதிஷ்குமார் அரசில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான மந்திரிகளும் வெற்றி பெற்றனர்.

மறுபுறம் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணிக்கு வெறும் 35 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதில் ராஷ்டிரீய ஜனதாதளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 75 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற ராஷ்டிரீய ஜனதாதளம் இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்திருப்பது அதன் தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. மெகா கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி 6, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு 2, ஐ.ஐ.பி. கட்சி 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 1 இடங்களையும் பிடித்தன. இவற்றைத்தவிர மஜ்லிஸ் கட்சி 5 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தன.

பீகார் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பீகாரில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கிறது. மாநிலத்தின் முதல்வர் யாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்பார் என தெரிகிறது. அதேநேரம் மாநிலத்தில் அதிக இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதால், பா.ஜனதாவை சேர்ந்த ஒருவரே முதல்வர் யாக வேண்டும் என அந்த கட்சியினரிடம் இருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது. பா.ஜ.க. சொந்தமாக ஆட்சியமைக்காத ஒரு சில மாநிலங்களில் பீகாரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து