எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெய்ஜிங் - சீன ராணுவத்தின் தலைமை தளபதியாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்க் பதவிபெற்றார். இந்த பதவி சீன ராணுவத்தின் கூட்டுப்படைகளின் தலைமை பொறுப்பாகும். 62வயது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்க் ஏற்கனவே ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் மத்திய ராணுவ கமிஷனின் பொதுச்செயலாளராகவும் உள்ளார்.
இந்த ராணுவ பதவி மக்கள் விடுதலை ராணுவத்தை கட்டுப்படுத்தும். இந்த நிலையில் ஜி ஜின்பிங்க் தற்போது சீன கூட்டு ராணுவத்தின் தலைவராக ஆகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் தற்போதைய நிலை உயரிய ,ஒருங்கிணைந்த, உரிய நேரத்திலான, தொழில் நுட்ப ரீதியில் துல்லியமாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்று ஜி ஜின்பிங்க் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்புக்கு வீரர்கள் தங்கள் மனநிலையை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
உலக ராணுவ அரங்கில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சீன ராணுவத்திலும் பெரும் மாற்றங்கள் வரவேண்டும். எனவே சீன வீரர்கள் மிக அசாத்திய முறைகளை கடைபிடிக்க வேண்டும் சீன ஜனாதிபதி வலியுறுத்தினார். தெற்கு சீனா பகுதியில் சர்சைக்குரிய இடங்கள் தங்களதுபகுதி என சீனா உரிமை கோரி வருகிறது. இந்த நிலையில் தங்களது ராணுவத்தினை சீன மாற்றம் செய்துவருகிறது. சீன மக்கள் ராணுவம் உலகின் மிகப்பெரிய ராணுவ படையாகும், அதில் 22லட்சத்து 85ஆயிரம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |