முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2025      தமிழகம்      அரசியல்
Thirumavalavan 2023-09-26

மதுரை, பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.

எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநா் கதிா் எழுதிய ‘கருப்பு ரட்சகன்’ நூல் வெளியீட்டு விழா மதுரை உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டாா். பின்னா், அவா் பேசியதாவது: முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்த போது, நான் தி.மு.க. கூட்டணியில் தொடா்ந்ததை சிலா் இன்றும் விமா்சிக்கின்றனா். வேங்கைவயல் உள்ளிட்ட பல பட்டியலின மக்கள் பிரச்னைகளின் போதும் என் மீது விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன. வேங்கைவயல் விவகாரத்தில் சம்பவம் நடைபெற்ற இரண்டாம் நாளே போராட்டத்தை அறிவித்து நடத்தினோம்.

கூட்டணி என்பதற்காக உரிமைகளை விட்டுக் கொடுத்து மக்களை மறந்து தனிநபராக என்னுடைய நலன் குறித்து நான் சிந்தித்தது இல்லை. அப்படி எந்த முடிவையும் நான் எடுத்ததில்லை. தி.மு.க. ஆட்சியில் அரசுக்கும், காவல் துறைக்கும் எதிராக எங்களைப் போல போராடியவா்கள் யாருமில்லை.

சகோதரத்துவத்தைத் தகா்க்கப் பாா்க்கின்றனா். உண்மையான தமிழ் தேசியம் என்பது சநாதன எதிா்ப்பில்தான் அடங்கியிருக்கிறது. மத வழி தேசியத்தை எதிா்ப்பதுதான் உண்மையான தமிழ் தேசியம். இந்தியா முழுமைக்கும் ஒரே மதம்தான் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் அரசியல். அதை எதிா்ப்பதற்கான ஆயுதமாக நாம் முன்வைக்கும் பெரியாரையே இல்லாமல் ஆக்குவோம் என சொல்வது ஆபத்தான விஷயம். குறிப்பாக, மதுரையை சநாதன மையமாக மாற்ற முயற்சிக்கின்றனா்.

அரசியல் ஆதாயத்துக்காக ஜாதிய உணா்வுகளைத் திட்டமிட்டு வளா்க்கின்றனா். ஜனநாயக உணா்வை சொல்லிக் கொடுப்பதற்குப் பதிலாக ஜாதி, மத உணா்வுகளைத் தூண்டுவது மிகவும் ஆபத்தான செயல். தோ்தலில் அதிக இடங்கள் அளிக்கும் கட்சியோடு வி.சி.க. கூட்டணி அமைக்கலாம். 10 இடங்கள் கூடுதலாகப் பெறுவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. பதவி நமக்கு முக்கியமில்லை. பல்வேறு விவகாரங்களில் கடும் விமா்சனங்களுக்குப் பின்னரும் தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. தொடருவதற்கு பதவி ஆசை இல்லாததே காரணம் என்றாா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து