எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.
இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம். இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது. வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.
சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது. மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன. இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான். உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு. அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.
நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித்தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது. சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால் இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.
சிறுநீரகம் சரியாக செயல்படாமல் இருபதின் அறிகுறிகள்: யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது. சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்:
சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர்களுக்கும், மது போதை பொருட்கள் உட்கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.
சிறுநீரகத்தைக் காக்க: * உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். * புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக்கூடாது. * அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். * எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது. * தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது. * வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்க: சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை, இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும். கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.