முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிதி வண்டி ஓட்டுங்க மிளிர்ச்சியாய் வாழுங்க

ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2016      வாழ்வியல் பூமி
Image Unavailable

உலகில் முதன் முதலில் மிதி இயக்கி மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான மிதிவன்டியை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் என்பவர் வடிவமைத்தார். ஆகையால்தான் இன்று மிதி வண்டியைக் கண்டறிந்தவராக கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளப் படுத்தப்படுகிறார். ஸ்காட்லாந்து நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக வேலை பார்த்து வந்த இவர் திசைமாற்றி, தடை மற்றும் மிதி இயக்கி ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான மிதிவண்டி ஒன்றை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார்.

இதில் பின்புறச்சக்கரம் முன்புறசக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரியதாக இருந்தது. முன் சக்கரத்தோடு திசைமாற்றி, தடை மற்றும் மிதிஇயக்கி ஆகியவை இணைக்கப்பட்டிருந்தது. தையல் இயந்திரத்தில் உள்ள மிதி இயக்கியை போன்று கீழ்நோக்கி அழுத்தும் போது பின்புறச்சக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டு மிதி வண்டி இயங்கியது. அதனை தொடர்ந்து மேம்பட்ட மிதிஇயக்கி தயாரிக்கும் பணியில் எர்னெஸ்ட் மிசாக்ஸ் என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கொல்லர் இறங்கினார். இவரது கடும் உழைப்பின் பயனாக 1863-ஆம் ஆண்டு கிராங்ஸ் மற்றும் பால் பியரிங்க்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்ட மிதி இயக்கி ஒன்றைத் தயாரிப்பதில் வெற்றி கொண்டார். முன்புற சக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த இந்த இயக்கியைச் மிதித்துச் சுழற்றும் போது முன்புறச் சக்கரம் முன்நோக்கி தள்ளப்பட்டு மிதிவண்டி இயங்கும்படி வடிவமைக்கப் பட்டிருந்தது.

இதற்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பைக் கண்டு 1868-ஆம் ஆண்டு மிசாக்ஸ் கம்பெனி என்ற பெயரில் மிதிவண்டி நிறுவனம் ஒன்றை துவக்கினார். இது உலகில் முதன் முதலில் வணிக நோக்கில் துவங்கப்பட்ட உலகின் முதல் மிதிவண்டி நிறுவனம் ஆகும். தமிழகப் பேச்சு வழக்கு:சைக்கிள்) மிதிக்கட்டைகளில் கால்களை வைத்து அழுத்தி உந்தப்படும் மனித ஆற்றலால் இயங்கும் ஒரு வண்டி. மிதிவண்டிகளில் ஒன்றன் பின் ஒன்றாக இரு சக்கரங்கள் ஒரே தளத்தில் ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். முன் சக்கரத்தை இடமும் வலமுமாக கையால் திருப்பும் படி அமைப்புள்ள கட்டுப்பாட்டுத் தண்டு இருக்கும். மிதிவண்டிகள் முதன்முதலாக 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாகின.

தற்பொழுது உலகெங்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மிதிவண்டிகள் உள்ளன. உலகின் பல பகுதிகளில், குறிப்பாக சீனாவிலும் நெதர்லாந்திலும் போக்குவரத்திற்கான முதன்மையான வண்டியாக உள்ளது. உந்து ஆற்றலை சக்கரத்துடன் சங்கிலியால் பிணைத்து இயக்கும் தற்போதைய மிதிவண்டிகளின் வடிவத்தை 1885 இல் அடைந்த பிறகு பெரும் மாற்றம் ஏதும் நிகழவில்லை போக்குவரத்து தவிர, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளாகவும் உடல் உறுதியை காப்பதற்காகவும் பாதுகாவற் பணிப் பயன்பாடுகளுக்காகவும் அஞ்சல் சேவைகளுக்கும் மிதிவண்டி விளையாட்டுக்களுக்கும் மிதிவண்டிகள் பயன்படுகின்றன1970 மற்றும் அதற்கு முன்பு சைக்கிள் வைத்திருந்தால் பணக்காரன்.

அதன் 1980 மற்றும் 1990களில் சைக்கிள் இல்லாத வீடே இல்லை என்ற நிலை வந்தது. அப்போது அங்கொன்று, இங்கொன்றாக பைக் இருந்தது. பின்னர் மொபட் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் கொஞ்ச, கொஞ்சமாக அதனை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. தற்போது சைக்கிள் அதிகமாக யாரும் பயன்படுத்துவ தில்லை. கோடை விடுமுறை என்றால் சைக்கிள் கடைகளில் ஒரு மணி நேரத்திற்கு வாடகைக்கு எடுத்து வந்த சைக்கிள் பயின்றனர் அப்போதைய பள்ளி மாணவ, மாணவிகள். இப்போதோ கம்ப்யூட்டர் கேம்ஸ், கிரிக்கெட் என பள்ளி மாணவர்கள் தங்களது வட்டத்தை சிறிதாக்கி கொண்டனர்சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும்

சைக்கிள் ஓட்டுவதால் பொன்னான‌ நன்மைகள்…

சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் பொன்னான‌ நன்மைகள்…சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பாக, மிதமான உணவையும் குடிநீரையும் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் அதிகமானால், வேகமாக சைக்கிள் ஓட்டும் போது வாந்தி வரவும் வாய்ப்பு உண்டு.முதலில் மெதுவாகத் தொடங்கி,  மிதமாக, வேகமாக, மிக வேகமாக என படிப்படியாகத்தான் சைக்கிளின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். சராசரியாக, மணிக்கு 20-25 கிலோமீட்டர் வேகத்தில்  ஓட்டுவது சிறந்தது. காலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிள் பயிற்சி செய்வது சிறந்தது. ஏனெனில், நண் பகல் நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது, அதிக வெப்பநிலை காரணமாக, உடல்எளிதில் சோர்வடைந்து விடும்.

இதயத்துடிப்பை அதிகப்படுத்தி, இதயத்தை வலுப்படுத்தவும், எலும்பு மற்றும் மூட்டுகளை வலுவாக்கவும், தசைகளை வலிமைப்படுத்தவும் சைக்கிளிங் உதவுகிறது. கையுறைகள் அணிந்து சைக்கிள் ஓட்டுவதால், மேல் உடலின் அனைத்து எடையையும் உள்ளங்கையில் சமன் செய்ய உதவும். தளர்வான உடைகள், தரமான காலணிகளை  அணிந்து கொண்டு சைக்கிள் பயிற்சி செய்ய வேண்டும்.போக்குவரத்து நெரிசல் குறைவான, இயற்கைச் சூழல்கொண்ட இடத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதன் மூலம் விபத்துகள் மற்றும் உடல்  மாசு ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.ஓய்வு நேரங்களில் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இதன்மூலம் புதிய இடங்களையும் இயற்கைக் காட்சிகளையும் ரசிக்கும் வாய்ப்பும் அனுபவமும் கிடைக்கும்.சிறு வயது முதலே சைக்கிளிங் செய்வதால், உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கலாம். நாம் சாப்பிட்ட உணவுப் பொருட்களில் இருக்கும் அதிகமான கலோரிகளை எரிக்கும் திறன், சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கிறது.முன்பாதத்தால் மிதித்துதான் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், கால் தசைகள் கூடுதல் பலம் பெறும். தினமும்  ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதால், கை, கால் தசைகள் உறுதி  பெறும்.

உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கவும், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுக்குள் வைக்கவும். உடல் வெப்பத்தையும் வியர்வையையும் வெளியேற்ற சைக்கிள் பயிற்சி உதவுகிறது.நம்மால் முடிந்த அளவிலான தூரத்துக்குச்செல்ல எப்போதும் சைக்கிளையே பயன்படுத்தினால், சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும். அவசர உலகில், சொகுசாக காரிலும், பைக்கிலும் செல்லும் போது, உடல் தசை நரம்புகள் செயல்பாடின்றி இருக்கிறது.

ஆகையால், தினமும், காலையில், 20 நிமிடம் சைக்கிள் பயணம் மேற் கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு ஈடாக அமையும். இதனால், கை, கால் தசை நரம்புகள் இறுக்கத்தை போக்கி, இலகுவான தேகத்தை தரும். உடலின் அனைத்து பாகங்களும் இயங்கும் உடற்பயிற்சி, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுவது தான். இதனால் சுறுசுறுப்புடன் அன்றைய நாளின் செயலை முடிக்க உதவும்.

காலையில் எழுந்து, இரண்டு கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டுவது, 10 கி.மீ., தூரம் ஓடுவதற்கு சமம். உடம்பில் இருக்கும் கெட்ட தண்ணீரை வியர்வையாக வெளியேற்ற உதவும் ஒரே உடற்பயிற்சியும் சைக்கிள் ஓட்டுவது தான். சைக்கிள் ஓட்டுவதன் முக்கியத்துவத்தை அறிந்து தான், நமது பக்கத்து நாடான சீனாவில், அலுவலகம் செல்லும் பலர் சைக்கிளில் செல்கின்றனர். சைக்கிள் செல்வதற்கென அங்கு பிரத்யேக ரோடும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony