முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு சாலைகளில் பள்ளங்கள்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கருத்து

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2025      இந்தியா
TK-Sivakumar

பெங்களூரு, பெங்களூரு சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், ‘சாலைகளில் உள்ள பள்ளங்களை யாரும் உருவாக்குவதில்லை, இயற்கை காரணங்களாலும், கனமழையாலும் அவை உருவாகின்றன’ என்று கர்நாடக துணை முதல்வரும், பெங்களூரு நகர மேம்பாட்டு அமைச்சருமான டி.கே. சிவகுமார் கூறினார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள் தொடர்பான பிரச்சனையைத் தீர்க்க நாங்கள் இங்கே இருக்கிறோம். பா.ஜ.க. இதில் அரசியல் செய்கிறது; அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். முதல்வர் சித்தராமையாவும் இது குறித்து ஒரு கூட்டத்தை நடத்துகிறார். பள்ளங்கள் இயற்கையால் ஏற்படுகின்றன; யாரும் அவற்றை உருவாக்க விரும்பவில்லை. பெங்களூருவில் வாகனங்களின் அதிகரிப்பு, அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக மழை காரணமாக அதிகளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கனவே 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளங்களை நிரப்பிவிட்டோம், பெங்களூருவின் சாலைகளில் இன்னும் 5,000 க்கும் மேற்பட்ட பள்ளங்கள் உள்ளன. பள்ளங்களின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல் ஆணையரிடம் கேட்டுள்ளோம்.

இதில் பா.ஜ.க. அரசியல் செய்வதை எங்களால் தடுக்க முடியாது. அவர்கள் சாலை மறியல் செய்யட்டும் அல்லது அவர்கள் விரும்பியதைச் செய்யட்டும். தீர்வுகளைக் காண நாங்கள் இங்கே இருக்கிறோம். விருப்புரிமை என்னுடையதாக இருந்தாலும் கூட, அனைத்து பா.ஜ.க. எம்எல்ஏக்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கியுள்ளேன். அந்த நிதியை கொண்டு பா.ஜ.க. எம்எல்ஏக்கள் ஏன் பள்ளங்களை நிரப்பவில்லை? இப்போதும் கூட, பள்ளங்களை சரிசெய்ய ரூ.25 கோடியை ஒதுக்கியுள்ளோம். எனவே அவர்கள் தங்கள் வேலையைச் செய்யட்டும்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து