எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தற்கால வளர் இளம் பெண்கள் பெரும்பாலும் பீசா, பர்க்கர், நூடுல்ஸ், பான்பூரி, பரோட்டா போன்ற துரித உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
பரோட்டா :- ஏழைகளின் உணவு என பரோட்டவை சொல்லுகிறார்கள். இது நாண்,குல்ச்சா, ரொமலி ரொட்டி என பல வேறு விசயங்களும் எடுத்துக்கிறது.1930 களில்தான் பரோட்டா தயாரிக்கப் பயன்படும் மைதாமாவு அமெரிக்காவிலிருந்து அறிமுகமானது. அங்கு மைதாவின் பெயர் பேஸ்டரி பவுடர். அதாவது பசைமாவு, இரண்டாம் உலப்போரின்போது ஏற்பட்ட கோதுமைத் தட்டுப்பாட்டால் மைதா மாவு உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது.
ஒட்டும் பயன்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல உணவுப் பொருளாக மாறிய மைதா சில ரசாயன சுத்திரிகரிப்புகளுக்கப் பிறகு அழகான பொருளாக பார்ப்போரை ஈர்க்கும் விதத்தில் பளிச்சென வெள்ளை ஆனது.மைதாவை வெள்ளையாக்குவதற்காக பென்ஸாயில் பெராக்சைடு என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. நாகரீகமான வார்த்தைகளில் சொன்னால் அதன் பெயர் ப்ளீச்சிங் கெமிக்கல், புரிகிற மாதரி சொல்வதானால் பினாயில் என்றுதான் சொல்லவேண்டும். கெட்டியாக இருக்கும் மைதாவை மென்மையானதாக மாற்ற அலாக்சான் என்ற ரசாயானம் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயை எலிகளுக்கு வரவழைக்கும் ரசாயனத்தின் பெயர்தான் அலாக்சான்.
மேற்படி மைதாவை ரீபைண்டு ஆயிலோடு சேர்த்து தயாரிக்கிறோம். நச்ச ரசாயனங்களின் கூட்டணியில் அமைந்த பராட்டாவை நாம் சாப்பிடும் போது நமக்கு இளம் வயதிலேயே சர்க்கரை நோய், pcod, obesity போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகிறது.
பிராய்லர் சிக்கன் :- உணவு உண்பது என்பது ஒரு வழிபாடு போல முன்பு இருந்தது.இப்பொழுது சாப்பிடுவது என்பது ஏதோ திருவிழா போல ஆகிவிட்டது. பிராய்லர் கோழியின் உடல் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ரோக்ஸார்ஜோன் என்ற ஹார்மோன் ஊசி மனிதர்களுக்கு புற்று நோயை (கல்லீரல் புற்று) உருவாக்கும் தன்மை வாய்ந்தது என்ற அமெரிக்க ஆராய்ச்சி உணர்த்துகிறது. பிராய்லர் சிக்கனை பயன்படுத்துவோருக்கு உடல் பருமன் மற்றும் வளர்இளம் பெண்கள் சிறு வயதிலேயே பூப்பெய்தல் போன்ற பாதிப்புக்களும் ஏற்படுகிறது.
நூடுல்ஸ் :- தற்போது மினிபஸ் போகாத கிராமங்ளுக்கு கூட 2 மினிட்ஸ் நூடுல்ஸ் போய்விட்டது. நூடுல்ஸ் தயாரிக்கப்படும் போதே ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க வேக்ஸ் என்னும் மெழுகு தடவப்படுகிறது. அது பெருங்குடலுக்கு ஆபத்தான ஒன்று. நூடுல்ஸ் சுவையை கூட்டுவதற்கா கூடுதலாக உப்பு சேர்க்கப்படுகிறது. இதனால் உடலில் சோடியம் அளவு அதிகரித்து சிறுநீரக பாதிப்பு வர காரணமாக அமைகிறது. மேலும் சுவையை கூட்டுவதற்காக ரசாயனக் கொழுப்பும் சேர்க்கப்படுகிறது. நலம்தரவேண்டிய ஒரு உணவு, சுவை கூட்டுவதற்காக சேய்யப்படும் மசலா கலவை, உப்பு, செயற்கைக் கொழுப்பு, சோடியம் ரசாயனக் சுவை கூட்டிகள் ஆகியவற்றால் நோய் தரும் நஞ்சாக மாற்றப்படுகிறது.
குளிர்பானங்கள் :- வளர் இளம் பருவத்தினரிடம் உணவுக்கு பதில் குளிர்பானங்கள் அதிகம் சாப்பிடும் நாகரீகம் பரவி வருகிறது. இந்த குளிர்பானங்களில் உள்ள செயற்கை பழச்சாறுகள், சுவையூட்டிகளும், கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பலவிதமான அமிலங்கள் கலக்கப்படுகின்றன. பொட்டாசியம், பென்சோவேட், சோடியம், சைக்ளோமேட், போன்ற வேதிப்பொருட்களையும் பெக்டின் ,அல்ஜினேட்,கராஜெனன் போன்ற திண்மையூக்கிளையும் பயன்படுத்துகின்றனர்.
சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்ற அமிலங்களும் மேற்கண்ட வேதிப்பொடுட்களும் இணைந்து நம் உடலை பதம் பார்க்கின்றன. இரைப்பையின் இயல்பு பாதிக்கப்பட்டு அமிலத்தன்மை உள்ளதாக மாறுகிறது. இரப்பை மற்றும் சிறுகுடல் பெருங்குடலில் புண்களை ஏற்படுத்தும் குணம் இப்பொருட்களுக்கு உள்ளது. தொடர்ந்து குளிர்பானம் அருந்தும் பழக்கமுடையவர்களுக்கு உணவுகளில் இருந்து சத்துக்களை பிரிக்கும் தன்மை குறைந்து பசியின்மை, அஜீரணம், புளித்த ஏப்பம், எதுக்களித்தல், வயிற்றுவலி, வயிறு கனமான உணர்வு போன்ற தொந்தரவுகள் தோன்றும். காலப்போக்கில் முழு செரிமான இயக்கமே பாதிப்புள்ளாகும் அபாயம் இவ்வகை வேதிப்பொருட்களால் ஏற்படும். இக்காலத்தில் பெண்களுக்க ஏற்படும் எலும்புச்சிதைவு நோய்க்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக குளிர்பானங்கள் இருக்கின்றன.
துரித உணவில் அதிர்ச்சி தரும் உண்மைகள் :- பாஸ்ட்புட் மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளும் எம்.எஸ்.ஜி என்ற ரசாயன உப்பு கலக்கப்படுகிறது. எந்தவகை ஹோட்டலாக இருந்தாலும் துரிதவகை உணவு என்றால் ருசிக்காக எம்.எஸ்.ஜி சேர்க்கப்படுகிறது.பீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற நிறைய உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. எம்.எஸ்.ஜி யின் வாசனை மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியை தூண்டுகிறது. ஹைபோதாலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும். இதனால் அதிகமாகவும், அடிக்கடி உணவு உண்ணவேண்டும் என்ற உணர்வும் தூண்டப்படும். இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் உண்கின்றனர். இதன் பக்கவிளைவு உடல் எடை கூடுவது மட்டுமில்லாமல் ,எம்.எஸ்.ஜி சேர்க்கப்படும் துரிதவகை உணவுகளால் துத்தநாகம் குறைபாடு ஏற்பட்டு ஞாபக சக்தி குறைவு, கவனக்குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் தண்ணீர் அருந்தும் மற்றும் உணவு உட்கொள்ள பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக்கினால் ஆனவகையாகவே உள்ளன. இவ்வாறு உபயோகிக்கும் பொழுது பிளாஸ்டிக்கில் உள்ள xeno Estrogen என்னும் கெமிக்கல் உடலுக்குள் ஊடுறுவி நமது இயற்க்கையாக சுரக்கும் ஈஸ்ட்ரோஜனை செயல்பாடின்றி செய்து ஈஸ்ட்ரோஜன் செயல்பாடு போல xeno Estrogen செயல்படும். ஆனால் xeno Estrogen னினால் இயற்கையான ஈஸ்ட்ரோஜன் போல் சினை உறுப்பு கருமுட்டை வளர வைக்கவோ, வெடிக்க வைக்கவோ முடியாது. இதனால் வளர்இளம் பெண்களுக்கு pcod ம் சினை உறுப்பு நீர்கட்டிகளும் உண்டாகி முறையற்ற மாதவிடாய் போக்கை உண்டாக்குகிறது. இதனாலேயே முன்மாதவிடாய் சிக்கல்களாக எரிச்சல், கோபம், டென்சன், மனஅழுத்தம், மன உளச்சல் முதலியன பெரும்பாலான வளர் இளம் பெண்களுக்கு உண்டாகிறது.
இதற்கான தீர்வு :- 1.கூடுமானவரை இயற்கை உணவுகளை மற்றும் ஆர்கானிக் உணவுகளையே அதிகம் உட்கொள்ள வேண்டும். 2.துரிதஉணவுகளை தவிர்க்க வேண்டும். நம்மால் முடிந்தவரை உணவு தயாரிப்பதற்கான பொருட்களை வீட்டிலேயே ரெடி செய்து கொள்வது நல்லது. நம்முடைய பாரம்பரிய நூடுலான இடியாப்பத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம். தினசரி உணவாக இருக்கும் நூடுல்ஸை படிப்படியாக மாற்றி சிறு தானிய உணவுகளைப் பழக்கப்படுத்தலாம். குளிர்பானங்களுக்கு பதிலாக வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர், பழ ஜூஸ்களைக் குடிக்கலாம். மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு பராட்டாவிற்கு பதில் கோதுமை பராட்டா, சப்பாத்தி போன்ற உணவுகளை சாப்பிட பழக்கலாம். 3. ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
4. caffine, chocklate அதிகம் உட்கொள்ளக்கூடாது.
5. யோகாசனம், தியானம்,போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் "காலை மாலை தினம் நடப்பவரின் காலைத் தொட்டுக் கும்பிடுவான் காலனே"
6.தண்ணீர் அருந்துவதற்கு மண்பானை, மற்றும் செப்பு பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.( தண்ணீர் அருந்தும்போது இதில் உள்ள காப்பர் தனிமம் நமது உடலுக்குள் ஊடுறுவி சினை உறுப்பு வளர்ச்சிக்கு உதவுகிறது). பூப்பெய்திய முதல் ஓராண்டு வரையாவது பெண்கள் சரியான உணவு முறைகளை உட்கொள்ள வேண்டும். வயதுக்கு வருவது என்பது வெறுமனே உதிரப்போக்கு அல்ல. அந்த காலகட்டத்தில் பெண்ணின் கருப்பை, சினை உறுப்பு வளர்ச்சியும், இடுப்பு எலும்பு வளர்ச்சியும் மற்ற எலும்புகளின் வளர்ச்சியும் அதிகமாகிறது. எனவே அந்த நேரத்தில் ஏராளமான புரதம், கால்சியம்,மற்றும்இரும்புசத்து தேவை. அதனால்தான் நம் கலாச்சாரத்தில் பெண்கள் வயதுக்கு வரும்போது முட்டை ,நல்லெண்ணெய், உளுந்து போன்றவற்றை கட்டாயம் சாப்பிடத்தரும் பழக்கம் இருக்கிறது.
4.இரத்த சோகை :- வளர் இளம் பருவத்தில் போதுமான சரிவிகித உணவு உட்கொள்ளாமை பெரும்பாலான பள்ளி மாணவ மாணவிகள் பகல் உணவைத் தவிர்க்கிறார்கள். இயற்கை உணவான கீரை, காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்வதில்லை,. சுகாதாரமற்ற முறையில் சாலை ஓரங்களில் கிடைக்கும் பாஸ்ட் புட் உணவு வகைகளை உட்கொள்வதினால் வரும் வயிற்றில் பூச்சி மற்றும் கிரிமி தொல்லைகளினாலும் இரத்தசோகை வரலாம். வளர் இளம் பெண்களுக்கு இப்பருவத்தில் வரும் ஒழுங்கற்ற மாதவிடாய் போக்கினாலும் இரத்த சோகை வரலாம்.
இதற்கான தீர்வு :- இதற்குத்தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்து காரணங்களை சரிசெய்ய வேண்டும். வளர் இளம் பருவத்தில் போதுமான சரிவிகித உணவு- பழங்கள், கீரைகள், காய்கறிகள் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் அப்பருவத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதினால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.
5. தலைமுடி உதிர்தல் :- போதுமான சத்துணவு உட்கொள்ளாததினாலும், தேவையற்ற இராசாயன பொருட்கள் கலந்துள்ள சாம்புகளை பயன்படுத்தினாலும், தலைமுடி யை சரிவர பராமரிக்காததாலும், மலச்சிக்கல், இரத்த சோகை, போன்ற காரணங்களினாலும், அதிக மன அழுத்தத்தினாலும், தலைமுடி வேர்களுக்கு தேவையான இரத்த ஓடேடமும் போசாக்கும் கிடைப்பதில்லை.ஆகையால் தலைமுடி உதிர்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
09 Jul 2025புதுடில்லி : தலைநகர் டில்லியில் உள்ள வீட்டில், தீயில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்
-
லார்ட்ஸ் மைதானம் - ஒரு பார்வை
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே இன்று 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள நிலையில் லார்ட்ஸ் மைதானம் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்.
-
ராஜஸ்தானில் கனமழைக்கு திறப்பதற்கு முன்பே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய சாலை
09 Jul 2025ராஜஸ்தான் : ராஜஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை திறப்பதற்கு முன்பே அடித்து செல்லப்பட்டது.
-
210 தொகுதிகளில் வெற்றி குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள்: இ.பி.எஸ். குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி பதில்
09 Jul 2025கரூர் : தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி சொல்வதை, மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளா
-
அணிக்கு திரும்பினார் ஜோப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: மனம் திறந்த விராட் கோலி
09 Jul 2025லண்டன் : இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி.
-
இது அவரின் ஹனிமூன் காலம்: சுப்மன் கில் குறித்து கங்குலி
09 Jul 2025மும்பை : இது அவருடைய ஹனிமூன் காலம்.
-
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி? 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 3-வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-07-2025.
10 Jul 2025