முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2025      தமிழகம்
Kovi-Chezhiyan 2025-09-19

Source: provided

தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் நேற்று 5 புதிய சொகுசு தாழ்தளப் பஸ்கள் சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியால் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. அவரது வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஏராளமான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மாற்றுத்திறனாளிகள் பஸ்களில் ஏறி, இறங்க சிரமப்படுவதை உணர்ந்து தாழ்தள பஸ்கள் சேவையை அதிகப்படுத்தி உள்ளார். இந்த தாழ்தள பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக, ஏறவும் இறங்கவும் முடியும். மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி முதியவர்கள், பெண்களுக்கும் இந்த பஸ்கள் எளிய முறையில் இருக்கும். அனைத்து விதமான சிறப்பு அம்சங்களும் இந்த பஸ்கள் கொண்டது.

கல்லூரி செமஸ்டர் தேர்வு என்பது பல்கலைக்கழகத்தால் வரையறுக்கப்பட்ட விஷயம். இதனைத் தேர்தல் ஆணையம் நன்கு அறியும். எனவே விடுப்பு காலங்களில் தான் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடத்தப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து