முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்காச்சோளத்தில் குறைந்த தண்ணீரில் அதிக மகசூல்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

குறைந்த தண்ணீரில் மக்காச்சோளம் பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம் என வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போதிய மழை இல்லை.

இதனால்  நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் நெல் சாகுபடியை தவிர்த்துள்ளனர். தற்போத குறைந்து நீரில் பயறுவகை பயிர்கள், மக்காச்சோளம் சாகுபடி செய்து புதிய தொழில்நுட்பங்கள் மூலம் அதிக மகசூல் பெறலாம் என் வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்தாவது. மக்காச்சோளம்  ஸ்டார்ச், பிரீவர்ஸ், மக்காச்சோளம்  மைதா, சிரப், சர்க்கரை, குளுக்கோஸ் போன்ற பல பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.

இதில் கோ 1, கே 1, கங்கா 5, கே.எச் 1,2,3, கோ.எச். எம் 5, எம் 900, எம் ஹைசெல்சின்ஜென்டா, என்.கே.6240, பயனீர் 30, லி 62, வி 92 மற்றும் பிக்பாஸ் ஆகியன முக்கிய வீரிய ஒட்டு ரகங்களாகும். ஏக்கருக்கு 6 கிலோ விதை பயன்படுத்தினால் போதும், விதை மூலம் பூசன நோயை தடுக்க 1 கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோ டெர்மாவிரிடி என்ற உயிரியல் பூசன கொல்லியை கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்னர் விதைக்க வேண்டும். இத்துடன் உயிரி உர விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஏக்கருக்கு 500 கிராம் அசோஸ்பைரில்லம் மற்று பாஸ்போபாக்டீரியவை ஆரிய வடிகஞ்சியில் கலந்து பூசன விதை நேர்த்தி செய்யத விதையை பின் 60ஒ20 செமீ இடைவெளியில் அதாவது பாருக்கு பார் 60 செமீ இடைவெளியில் ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் 4 செமீ ஆழத்தில் விதையை ஊன்ற வேண்டும். ஒரு சதுர மீட்டரில் 8 செடிகளும், ஒரு ஏக்கரில் 32 ஆயிரத்து 240 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.

சாகுபடிக்கு 119 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட், 17 கிலோ பொட்டாஸ் இட வேண்டும். விதைத்த 3 நாட்களுக்கு பின் மண்ணில் போதுமான ஈரம் இருக்கும் போது களைக் கொல்லியான அட்ரசின் 50 சதம் நனையும்தூள் 200 கிராம் அல்லது ஆலோகுளோ 1.6 லிட்டர் என்ற அளவில் 360 லிட்டர்  தண்ணீரில் கலந்ந் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் குருத்துபுழு தாக்குதல் தென்படும்.

இதனை கட்டுபடுத்த செடிக்கு 2 கிராம் வீதம் பியூரட்டான் குருணை மருந்தை மணலில் கலந்து செடியின் குருத்தில் விதைத்த 20வது நாள் இடவேண்டும்.  தேவைக்கேற்ப 6 முதல் 8 முறை நீர்பாசனம் செய்ய வேண்டும். இவ்வாறு தொழில் நுட்பங்ககளை கடைபிடித்தர் ஏக்கரில் 2500 முதல் 3000 கிலோ வரை மகசூல் எடுத்து ரூ.45,0000 வரை வருமானம் பெறலாம் என தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!