முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்

வியாழக்கிழமை, 1 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2021 11 29

திருச்சி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சமத்துவ நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணத்தை தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று  (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் தொடங்கி வைத்து பேசுகிறார்.

இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடல் வரை சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.

சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு அது தொடர்பாக சென்னையில் இருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று திருச்சிக்கு வந்து ஆலோசனை நடத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து