முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோய்கள் வரக் காரணமும் அதன் தடுப்புமுறைகளும்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      மருத்துவ பூமி
Image Unavailable

Source: provided

மாலை கண் நோய் வரக் காரணம் என்ன?

மாலை கண்  நோய் வைட்டமின் எ குறைவினால் வருகிறது. முன்பெல்லாம் உணவு சத்து குறைவினால் இந்த நோய் வரும். தற்காலத்தில் இது அதிகமாக இல்லை. காரணம் நடைமுறை வாழ்கை. இதனை தடுப்பதற்காக பிப்பரவரி மாதம் வைட்டமின் எ திரவம் வழங்கபடுகிறது. சில பேருக்கு பரம்பரை காரணமாகவும் இந்த நோய் வரலாம். பச்சை காய் கறிகள், கீரை வகைகள், காரட், பொன்னாங்கண்ணி, அனைத்து வகை பழங்கள் ஆகியவை அதிகமாக சாப்பிட பிராய்ளர் கோழி சாப்பிடகூடாது. சதை வளர்ந்து அதனால் கண் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது.
மாரடைப்பு வர காரணம் என்ன?

நடைமுறை வாழ்கை சரியில்லாமல் போனால் மாரடைப்பு வருவதற்கு வழிகோலும்.  இயந்திரங்களால் உடல் உழைப்பு  குறைந்துவிட்டது நாம் நிறைய வேலைகளை மறந்து விட்டோம் அதனால் கொழுப்பு அதிகமாகி மாரடைப்பு வருகிறது. ரத்த குழாயில் அடைப்ப ஏற்பட்டு மாரடைப்ப வருகிறது. அதன் தொடர்ச்சியாக பக்கவாதம், சிறுநீரக உறுப்புகள் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. சரியான உடல் பயிற்சி செய்ய வேண்டும். தினமும் காலை நடக்க வேண்டும். சரியான உணவு முறை இருந்தால் மாரடைப்பு வருவதை தடுக்கலாம்.
வாயில் புண் வருதல் ஏன்?

பாக்டீரியா பாதிப்பினால் வருகிறது. தோல் நோய் பொதுவாக பரவக்கூடியது. இரண்டு முறை குளித்தால், நன்றாக துடைத்து விடுதல், சத்தான உணவு கொடுத்தல், நல்ல சோப்பு போட்டு குளித்தல் மூலமாக இதனை தவிர்க்கலாம். ஒரே சோப்பு போட்டு குளிக்க வேண்டும். சோப்புகளை மாற்றகூடாது ஒருவர் பயன்படுத்திய சோப்பை மற்றவர் பயன்படுத்த கூடாது.
ஆஸ்துமாவை எப்படி தடுப்பது?

இது பெரிய நோய் தற்காலிகமாக குணபடுத்தலாம். அதிகாமா சளி பிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குளிர் காலங்களில் ஆஸ்துமா உள்ளவர்கள் முன்கூட்டியே தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். சுடு தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். காற்று மாசுபடுவதே இதற்கு முக்கிய காரணம். கிருமி பரவுவதும் காரணமாகும்.
பற்பசையில் எது நல்லது?

பற்பசையில் அதிகம் எதனில் வேதி பொருள்கள் கலக்க வில்லையோ அதுவே நல்ல பற்பசை ஆகும்.  பல் துலக்குதல் தான் முக்கியம். மேல் இருந்து கீழ், கீழ் இருந்து மேல் என பல் துலக்கினால் பல்வேறு பல் நோய்கள் சரியாகும்.

குடல் வால்வு நோயை தடுப்பது எப்படி?

இது பொதுவாகவே பிறப்பில் இருந்து எல்லோர்க்கும் இருக்கும். அதிகமான எண்ணெய் பொருள்கள் சாப்பிடும்போது உடலின் ஜிரண சக்கி குறையும். வீக்கம் அதிகமாகும். காய்கறிகள் , பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும்.

சர்க்கரை நோய் வரக் காரணம் என்ன?

சரியான உணவ பழக்க வழக்கங்களை மேற்கொள்ளாத போத உடல் பாதிக்கப்படும். புரோடீன் அதிகம் இருந்தால் இந்த பாதிப்பு வரும். உடல் உழைப்பு அதிகம் வேண்டும். ஒரளவு வயதனவர்களுக்குதான் இந்த நோய் முன்பெல்லாம்  வந்தது. ஆனால் இப்போது குறைந்த வயதில் சுமார் 20 வயதில் 30வயதில் வருகிறது. தாய் ஆரோக்கியமாக உணவுகளை நல்ல முறையில் உண்ண வேண்டும்.

வேலை நன்றாக செய்தால் மட்டுமே இந்த நோய் சரியாகும். உடல் உழைப்பு குறைந்ததே இதற்கு காரணம்.வயது ஆக, ஆக திங்கள் முதிர்ந்து இறந்து போகும். எனவே ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொண்டு உடலை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.

எஸ்.ரவி,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்