Idhayam Matrimony

ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்

வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2025      உலகம்
Tomichi-Murama-2025-10-17

டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா, உடல்நலக்குறைவு காரணமாக அவரது சொந்த ஊரான ஒய்டா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முர்யமா நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 101.ஜப்பான் சோஷியாலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரான டோமிச்சி முர்யமா, கடந்த 1994-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஜப்பானின் பிரதமராக பதவி வகித்தார். கடந்த 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி முர்யமா வெளியிட்ட மன்னிப்பு அறிக்கை மிகவும் பிரபலமானதாகும்.

கடந்த 1945-ம் ஆண்டு, ஜப்பான் அரசு நிபந்தனையின்றி சரணடைந்த பின்னர் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அந்த தினத்தின் 50-வது ஆண்டு நினைவு நாளையொட்டி முர்யமா ஒரு மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டார். அதில், போர்க்காலங்களில் ஜப்பான் ராணுவம் நடத்திய போர்க்குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்கு மன்னிப்பு கோருவதாக அவர் கூறினார்.

அவரை தொடர்ந்து ஜப்பான் பிரதமராக பதவி வகித்த அனைவரும், ஜப்பானின் போர்க்குற்றங்களுக்காக மன்னிப்பு கோரினர். ஆனால் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த 2013-ம் ஆண்டிற்கு பிறகு மன்னிப்பு கோருவதை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து