முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகிலேயே முதன்முறையாக சோமடோம் கோ.நெவ் சி.டி. ஸ்கேனர் மதுரை கே.ஜி.எஸ். ஸ்கேன்ஸில் அறிமுகம்

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      மருத்துவ பூமி
Image Unavailable

Source: provided

இந்தியா உள்பட உலகம் முழுவதும் இன்று நோயாளிகளின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இது சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. சுகாதாரத்துக்கான பட்ஜெட்கள் சுருங்கி வருவது, மருத்துவச் செலவுகளை மீளப்பெறும் நடவடிக்கைகள் குறைந்து வருவது போன்றவை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த தரமான மருத்துவத் தொழில்நுட்பத்தை அளிப்பதற்கான முதலீடுகளைச் செய்வதில் கடினமாக இருக்கிறது. நல்ல திறமையான மருத்துவப் பணியாளர்கள் கிடைப்பது, பல இடங்களில் மற்றொரு சவாலாக இருக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்கு விடை காண்பதற்காக சீமென்ஸ் நிறுவனத்தின் சொமாடோம்  கோ. நவ்-32 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேனர் கருவியை மதுரையில் உள்ள கேஜிஎஸ் அட்வான்ஸ்டு எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி.ஸ்கேன்ஸ் நிறுவனம் பொருத்த முடிவு செய்துள்ளது. உலகிலேயே இதுபோன்ற கருவியை பொருத்தவுள்ள மூன்று மருத்துவ நிறுவனங்களில் கேஜிஎஸ். நிறுவனமும் ஒன்றாகும்.

சொமாடோம் கோ. நவ் கருவியை கையடக்கக் கணினி வழியாகவே இயக்க முடியும். இதனை இயக்குபவர்கள் எளிதாக இருந்த இடத்தில் இருந்தே இயக்க முடியும். உலகிலேயே முதல் முறையாக இதுபோன்ற கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் தரம் வாய்ந்த நடவடிக்கைகளைக் கொண்டு இந்த கருவியை வடிவமைக்கப்பட்டுள்ளதால், சில உள்ளீடுகளைக் கொண்டே கருவியை இயக்க முடியும். குறைந்த அளவிலான பயிற்சியைப் பெற்று இருக்கக் கூடிய குறிப்பாக அவசர நேரத்தில் இரவு நேர பணியில் உள்ளவராலும் கருவியை இயக்க முடியும். மிகவும் தரமான ஸ்கேன் புகைப்படங்கள் இந்தக் கருவி மூலமாகக் கிடைக்கும் என்ற உறுதியை நிச்சயமாக அளிக்கலாம். மேலும், இந்தக் கருவி மூலம் தவறுதலாக ஸ்கேன் எடுத்து மீண்டும் எடுப்பது, நோயாளிகள் தேவையில்லாமல் காத்திருப்பது போன்றவை அறவே தவிர்க்கப்படும். விபத்தில் சிக்கியிருப்பவர்கள், எலும்பு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் போன்றவர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.

இந்த நவீன கருவியை மொபைல் கையடக்கக் கணினி வழியாக கட்டுப்படுத்த முடியும். ஸ்கேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர், சி.டி. ஸ்கேன் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் ஓடியாடி சென்று கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்கேன் தயாராகும் வரை மருத்துவப் பணியாளர் நோயாளிகளின் அருகிலேயே இருக்க முடியும். இது நோயாளிகள் குறிப்பாக குழந்தைகளுக்கு நம் அருகில் ஒருவர் இருக்கிறார் என்ற ஒரு நிம்மதியைத் தரும். தனிமையைக் கண்டு அஞ்சும் நோயாளிகளுக்கு இந்த ஸ்கேன் கருவி பெரிதும் உதவியாக இருக்கும். இதன் சுழலும் வேகமானது 0.8 விநாடிகள் என்பதால் விரைவான அதேசமயம் மிகவும் உயர்தரமான ஸ்கேன் படங்களை எடுக்க முடியும். மேலும், நோயாளிகளும் எந்தவித இடையூறுமின்றி வசதியாக இருப்பர், என்று சீமென்ஸ் ஹெல்த்தினீர்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் விவேக் கனாடே தெரிவித்தார்.

கேஜிஎஸ் ஸ்கேன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.ஜி.ஸ்ரீனிவாசன் கூறுகையில், ஒவ்வொரு நோயாளிக்கும் தங்களது உடல்நிலை பற்றி மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ளவும், அதுதொடர்பாக சிகிச்சை பெறவும் உரிமை உள்ளது. சுகாதாரச் சேவையை அளிப்பவர் என்ற முறையில் நோயாளிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு நாங்கள் விருப்பம் கொண்டிருக்கிறோம். சொமாடோம் கோ.  நவ் ஸ்கேன் கருவியானது எங்களது மையத்தின் தேவையை உண்மையிலேயே பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. குறிப்பாக நோயாளிகள் அதிக நேரம் காத்திருப்பது போன்ற விஷயங்களுக்கு தீர்வைத் தருவதாக அமைந்துள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்