எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி - ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை பொது வேட்பாளராக நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைகிறது. எனவே, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யவும், தேர்தல் வியூகம் அமைக்கவும் நடபுதுடெல்லி, மே 07 -
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மகாத்மா காந்தி பேரன் கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்த ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலையில் முடிகிறது
தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜி முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது 2012-ம் ஆண்டு அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவி காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணியை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது.
பாபர் மசூதி வழக்கு
மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அக்கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் அத்வானி நிறுத்தப்படுவது கேள்விக்குறியாகி விட்டது. இதே போல் மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி மீதும் பாபர் மசூதி இடிப்பு வழக்கு இருப்பதால் அவரும் போட்டியில் இல்லை.
இதனால் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று பா.ஜனதா மேலிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
பா.ஜ.க.வுக்கு பலம்
பாராளுமன்றத்தில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. மேலும் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியதுடன் எம்.எல்.ஏ.க்கள் பலமும் அதிகரித்துள்ளது. இது தவிர பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் உள்ளது. இதனால் பா.ஜனதா சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
பொது வேட்பாளர்
இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த ஆலோசனை நடந்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்துப் பேசி ஆலோசனை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை
அதன் பிறகு ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவுடன் சோனியாகாந்தி டெலிபோனில் பேசி ஆலோசனை நடத்தினார். இதே போல் முலாயம்சிங் யாதவுடனும் பேச்சு நடத்தப்பட்டது. மேலும் இடது சாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காந்தி பேரன்
இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக கோபால கிருஷ்ணகாந்தியை நிறுத்த ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மகாத்மா காந்தியின் பேரன் ஆவார். மூதறிஞர் ராஜாஜிக்கும் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஏ.எஸ். படித்து 1968-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு துணை ஜனாதிபதியின் செயலாளராகவும், ஜனாதிபதியின் இணை செயலாளராகவும் பணியாற்றினார். தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நார்வே, ஐஸ்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் கவர்னராக பணிபுரிந்துள்ளார்.
தீவிர ஆலோசனை
2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந்தேதி மேற்கு வங்காள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு சென்னை கலா சேத்ரா பவுண்டேசன் சேர்மனாக நியமிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு மே மாதம் வரை அந்த பொறுப்பில் இருந்தார். தற்போது ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கோபாலகிருஷ்ணகாந்தி பெயர் அடிபடுகிறது. இதையடுத்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பான ஆலோசனை தீவிரம் அடைந்துள்ளது.
வடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, எதிர்கட்சிகள் சார்பாக யாரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பல்வேறு கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்த தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல், 2009-ம் ஆண்டுவரை மேற்கு வங்காள மாநில கவர்னராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
19 Sep 2025சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் : மத்திய அமைச்சர் தகவல்
19 Sep 2025புதுடெல்லி : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
-
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று நேரம், அட்டவணை வெளியீடு
19 Sep 2025துபாய் : சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி நேரம், அட்டவணை, திடல் விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
8 அணிகள் பங்கேற்ற...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
லக்னோவில் நடந்த இந்தியா 'ஏ'-ஆஸி. 'ஏ' டெஸ்ட் போட்டி டிரா
19 Sep 2025லக்னோ : இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையே லக்னோவில் நடந்த அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
வார ராசிபலன்
20 Sep 2025