முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கை இடர்பாடுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் செம்மணங்கூர் ஊராட்சியில், பேரிடர் மேலாண்மை இயக்கத்தின்கீழ், மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளில் உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி ரூ.20 இலட்சத்திற்கான காசோலையை கலெக்டர் முனைவர்.இல.சுப்பிரமணியன், தலைமையில்,  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

 நிவாரண நிதி

விழுப்புரம் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளில் உயிர் நீத்த கண்டாச்சிபுரம் வட்டத்தைச் சேர்ந்த செல்வபாங்கி கபெ.சந்திரசேகர், செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த செல்வன்.செல்வம் தபெ.திருமால், விழுப்புரம் வட்டத்தைச் சேர்ந்த அங்காளம்மாள் கபெ.ஏழுமலை, உளுந்தூர்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் தபெ.தண்டபாணி, திருஞானவேல் தபெ.சங்குவேல் ஆகியோரின் வாரிசு தாரர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4,00,000- இலட்சம் வீதம் ரூ.20,00,000- இலட்சத்திற்கான காசோலையை  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மகேந்திரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தாமரை மற்றும் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து