எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
செம்பருத்தி - பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடியாகும். சிவப்புநிறப் பூக்களையுடைய பருத்திச் செடியே செம்பருத்தி என்று அழைக்கப்படுகிறது. காசிபியம் ஆர்போரியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் பூக்களே மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன. இந்தியா, இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனத்தைச் சேர்ந்தது. இது கிழக்கு ஆசியாவில் தோன்றியது. இதை சீன ரோஜா எனவும் அழைக்கின்றனர்.
இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது. செம்பருத்திப் பூக்கள் இரண்டு விதமாக இருப்பதுண்டு. ஒன்று தாமரை மலர் போன்று அடுக்கு அடுக்காகவும், தனித்தனியான இதழ்களுடனும் இருக்கும். இந்தப்பூக்களில் தங்கச்சத்து இருப்பதால், தங்க பஸ்பம் சாப்பிடும்போது இந்தப் பூ கஷாயத்தைத் துணை மருந்தாகச் சாப்பிடுவார்கள். இந்தச்செடியின் நுனி முதல் வேர் வரை அனைத்தும் பயன்தரக்கூடியது.
இதே குடும்பத்தைச் சார்ந்த செம்பரத்தை செடிகளை நாம் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகளாகும். செம்பரத்தை செடிகளும், செம்பருத்திச் செடிகளும் வேறு, வேறு செடிகளாகும்.
செம்பருத்தியில் ஸ்டெர்குலிக் அமிலம், மால்வாலிக் அமிலம், அஸ்கோர்பிக் அமிலம், குளுக்கோசைடுகள், சயனின், சயனிடின், தயமின், நியசின், கரோட்டின் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.
சில குழந்தைகள் உடல் பலகீனத்துடன் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருப்பார்கள். இந்தக் குறையை போக்கிட, ஐந்து செம்பருத்திப்பூக்களை ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு கால் லிட்டர் ஆகும்வரை நன்கு காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து தொடர்ந்து கொடுத்து வர, சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் கிடைக்கும்.
செம்பருத்தி பூக்களிலுள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துவதுடன், அதிக சூடு மற்றும் வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்கின்றன.
ஆண்மை பெருக்கத்திற்கும், உடல் வலிமைக்கும் செம்பருத்திப்பூக்களின் நடுவில் உள்ள மகரந்தக் காம்புகளை சேகரித்து, வெயிலில் நன்றாக உலர விடவேண்டும். உலர்ந்த மகரந்தக் காம்புகளை நன்கு தூளாக்கி, அந்த தூளை ஒரு கண்ணாடி புட்டியில் அடைத்து நன்கு மூடி வைக்க வேண்டும். பிறகு இந்த தூளை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி என்ற கணக்கில் தினமும் காலையும் மாலையும் பசும்பாலில் கலக்கிக் குடிக்க, உடலை நல்ல புஷ்டிகரமாகவும், ஆண்மையையும் பெருக்கும்.
பேன், பொடுகு தொல்லை நீங்க, இரவு படுக்கைக்குப் போகும் முன் செம்பருத்திப்பூக்களை எடுத்து தலையில் வைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும். இதேபோல் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் தலையில் உள்ள பேன், பொடுகு மற்றும் சுண்டுகளும் நீங்கிவிடும்.
செம்பருத்திப் பூவிதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வந்தால் தலை சூடு தணியும். வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்ணை குணமாக்க, தினமும் ஐந்து செம்பருத்திபூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.
ரகசிய நோயான வெட்டை நோயை குணமாக்க, செம்பருத்திப்பூவை அதிகாலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டவுடன் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட்டால் நல்லது. இப்படியாக 40 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோயாக இருந்தாலும் குணமாகும்.
ஐந்து அல்லது ஆறு செம்பருத்திப்பூக்களின் இதழ்களை எடுத்து ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, அதை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி எடுத்த கஷாயத்தை நான்கு மணிக்கு ஒரு முறை ஒரு தேக்கரண்டி வீதம் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் கல்லீரல் சம்பந்தமாக ஏற்படும் பலவித குறைபாடுகளையும் அகற்றிவிடலாம்.
ஐந்து செம்பருத்திப்பூக்களை எடுத்துக் கொண்டு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக இதனை குடிக்க உடல் உஷ்ணம் தனியும்.
செம்பருத்தி பூவிதழ்களை மட்டும் பிரித்து அம்மியில் வைத்து நன்கு அரைத்து அரைநெல்லிக் காயளவு உருண்டையாக உருட்டி பாலுடன் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து 5 நாட்கள் குடித்து வந்தால் தேவையற்ற கோபம் மற்றும் பதட்டத்தினால் உண்டான உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியுண்டாகும்.
செம்பருத்திப்பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் குடித்து வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.
செம்பருத்திப்பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயமாகக் காய்ச்சி குடித்து வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும். வெள்ளைப்படுதலும் குணமாகும்.
இருதய நோய் அணுகாமல் தடுக்க செம்பருத்திப்பூ இருநூறு எண்ணிக்கை எடுத்துக்கொண்டு சிறுசிறு துண்டாக்கி ஒரு பீங்கான் தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு எலுமிச்சம் பழங்கள் இருபத்தைந்து எண்ணிக்கை எடுத்து பிழிந்து கொள்ள வேண்டும். அந்தச் சாற்றை செம்பருத்திப்பூ உள்ள பீங்கான் தட்டில் ஊற்றி நன்கு பிசைய வேண்டும். இந்த கலவையை வெயிலில் வைக்க வேண்டும்.
மாலையில் இதனை எடுத்து மீண்டும் பிசைய வேண்டும். எந்த அளவுக்கு நாம் டானிக் தயாரிக்கயிருக்கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் சர்க்கரையை ஒரு இரும்புச் சட்டியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் கலந்து தேன் பாகு பக்குவத்திற்கு நன்கு காய்ச்ச வேண்டும். பின்பு இதில் முன்பு தயார் செய்து வைத்திருந்த செம்பருத்திபூச்சாற்றை வடிகட்டி ஊற்றி கலக்கிக்கொள்ள வேண்டும்.
இந்த சர்பத் பக்குவ டானிக்கை தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் வேளைக்கு இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்துவர இருதய நோய் அணுகாமல் தடுக்கலாம். இருதய நோய் ஏற்பட்டவர்களும் இதனை குடித்துவர நோயை தடுத்துவிடலாம்.
செம்பருத்தி இலைகள் புற்று நோயை எதிர்த்து போராடுகிறது, இந்த இலைகளை வெந்நீரில் கலந்து குடிக்க புற்று நோயை குணமாக்கலாம். இதன் இலைகளை கொண்டு பேஸ்ட் செய்து புற்று நோயால் ஏற்பட்ட புண்களில் மீதும் தடவலாம்.
செம்பருத்தி இலையில் வைட்டமின் சி வளமையாக உள்ளதால், சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க இது பெரிதும் உதவுகிறது.
செம்பருத்தி இலையில் ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் காய்ச்சல் போன்ற வெப்பத்தை தணிக்கவும் இது பெரிதும் உதவுகிறது.
செம்பருத்தி இலை உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடலின் தட்பவெப்ப நிலையை மேம்படுத்த உதவுகிறது.
சிறுநீரக பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை உள்ள நோயாளிகள் செம்பருத்தி இலை கலந்த தேநீரை பருகினால் சிறுநீரக தொற்றுக்களை சரி செய்து, இரத்த கொதிப்பை குறைக்கவும் உதவுகிறது.
செம்பருத்தி இலைகளை சீரான முறையில் மென்று வந்தால், செரிமானத்திற்கு உதவி புரிந்து உடல் எடையையும் குறைக்கச் செய்யும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.