முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி அ.தி.மு.க ஒன்றிய, நகர செயலாளர்கள் நீக்கம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். நடவடிக்கை

வியாழக்கிழமை, 25 ஜனவரி 2018      அரசியல்
Image Unavailable

சென்னை, தேனி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நகர  செயலாளர்கள் அதிரடியாக நீக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

அ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில்  நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நல்லவேலுச்சாமி, ( மாவட்டக் கழக அவைத் தலைவர் ), அறிவுக்கொடி ரத்தினவேல், ( மாவட்ட இணைச் செயலாளர் )பா.ராஜாமணி, ( அதிமுக பொதுக்குழு உறுப்பினர், கம்பம் தொகுதி ) ராஜ்குமார், ( மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ) செல்வம், ( மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்  ராமர், ( மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் )மணி, ( மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் ) கருவேல் நாகராஜன், ( மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ) அப்துல்காதர் ஜெய்லானி, ( உத்தமபாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர் ) முத்துச்சாமி, ( சின்னமனூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ) தர்மராஜ், ( கடமலை-மயிலை ஒன்றியக் கழகச் செயலாளர் ) பாலு, ( கம்பம் நகரக் கழகச் செயலாளர் ) சுரேஷ், ( சின்னமனூர் நகரக் கழகச் செயலாளர் ) து.ரவிக்குமார், ( ஹைவேவிஸ் பேரூராட்சிக் கழகச் செயலாளர் ) நடராஜன், ( கோம்பை பேரூராட்சிக் கழகச் செயலாளர் பாண்டியன், ( பண்ணைபுரம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் ) ஜான் போஸ்கோ, ( தேவாரம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் ) ராஜசேகரன், ( வீரபாண்டி பேரூராட்சிக் கழகச் செயலாளர் ) சுரேஷ், ( தேவதானப்பட்டி பேரூராட்சிக் கழகச் செயலாளர் ) முத்துச்சாமி,  ( வடுகபட்டி பேரூராட்சிக் கழகச் செயலாளர் ) ராமதண்டபாணி, ( தாமரைக்குளம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் ) ஆகியோர் நீக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் ஈரோடு மாநகர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைத்தலைவர் எஸ்.சி.பி. ரமேஷ், மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறையை சேர்ந்த பிரபு ஆகியோர் ஆகியோர் இன்று முதல் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு ஒ.பி.எஸ், இ.பி.எஸ்  தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து