முறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு

திங்கட்கிழமை, 4 ஜூன் 2018      அரசியல்
jayakumar(N)

சென்னை, முறுக்கிக்கொண்டு போன மாப்பிள்ளை தற்போது மீண்டும் பேரவைக்குள் வந்துள்ளார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

பேரவை கூட்டத்தொடரில் தி.மு.க. பங்கேற்க வேண்டும் என தோழமை கட்சித் தலைவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசிய தேவை என்பதால்  தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் பேரவைக்கு செல்கிறோம் என்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபடுவோம் என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், முறுக்கிக்கொண்டு போன மாப்பிள்ளையும் மற்றவர்களும் (தி.மு.க. உறுப்பினர்கள்) தற்போது மீண்டு பேரவைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களாகவே போனார்கள். தற்போது அவர்களே வருகிறார்கள். 4 நாட்களாக பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவற விட்டது. எப்படியோ, தற்போது ஜனநாயக கடைமையாற்ற வரும் தி.மு.க.வை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து