முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலைவாய்ப்புகளை வாரி வழங்கிடும் படிப்புகளின் விபரம்

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

நல்லவேலை வாய்ப்புகள் தரும் படிப்புகள் நூற்றுக் கணக்க்கில்  இன்று உள்ளன. பள்ளிக் கல்வியை முடித்த ஒருவர் அதற்கு மேல் என்னென்ன படிப்புகளை மேற்கொண்டு வேலைவாய்ப்பினைப் பெறலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.

தற்போது மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி என்பது தான் பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படை என்னும் நிலை உருவாகியுள்ளது. பணிவாய்ப்புக்குரிய கல்வித் தகுதிகளைத் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, கலை அறிவியல் கல்வி, சிறுதொழில் கல்வி எனப் பலவாறாகப் பிரிக்கலாம்.

தொழிற்கல்வி

மருத்துவம், பொறியியல், வோளண்மை, சட்டம் முதலியவை தொழிற்கல்வித் துறைகள், மேல்நிலைக் கல்வியில் உயர்மதிப்பெண் பெற்றோர் அந்தந்தப் பாடப் பிரிவின் தகுதிக்கேற்ப விண்ணப்பிக்கலாம்.

இவர்கள் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுக் கல்லூரிகளில் சேர்ந்து உரிய காலத்தில் படித்து முடிப்பர். படித்து முடித்தவர்கள் அவரவர் தகுதிக்கேற்ப உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பணிபுரியும் வாய்ப்புண்டு.

தற்போது உயிரி தொழில்நுட்பத்துறை, நுண்ணியல் தொழில்நுட்பத் துறை சார்ந்த தொழிற் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. வேதியியல், விலங்கியல் துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கும் சுற்றுச்சூழல், வேளாண்மை, மருத்துவம் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் சிறந்த வேலைவாய்ப்புத் துறையாக தற்போது இது விளங்கி வருகிறது.

தொழில்நுட்பக் கல்வி

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், தாம் பெற்ற உயர் மதிப்பெண்களுக்கு பல் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து பயிலலாம். பொறியியில் துறையில் உள்ளது போலப் பல்வேறு துறைகள் இதிலும் உண்டு. இதில் சேர்ந்து படிப்பவர்களுக்கும் இக்கால கட்டத்தில் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு வாய்ப்புண்டு.

மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலையாசிரியர் கல்விப் பயிற்சி இரண்டாண்டுகள் படித்து தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேரலாம். மேலும் செவிலியர் பயிற்சி, கூட்டுறவுப் பயிற்சி ஆகியவற்றில் சேர்ந்து பயிற்சி பெற்று வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

கலை, அறிவியல் கல்வி

மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றோர் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், பொருளியல், வரலாறு, கணக்குப் பதிவியல், கணிப்பொறியியல், வணிகவியல் போன்ற பிரிவுகளில் சேர்ந்து இளங்கலைப் பட்டமும் அதன்பின்னர் முதுகலைப் பட்டமும் பெறலாம்.

பின் கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து இளம் கல்வியியல் பட்டம் பெற்று ஆசிரியர் பணியைப் பெறலாம். தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடுவண் அரசுத் தேர்வாணையம், வங்கித் துறை, ஆயுள் காப்பீட்டுத் துறை, தொடர் வண்டித்துறை முதலிய துறைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுப் பல்வேறு வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

இதற்கான தகவல்களை நாளேடு, வானொலி, தொலைக்காட்சி, முதலிய ஊடகங்களின் மூலம் பெற்று முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தும் வேலை வாய்ப்புக்களைப் பெறலாம்.

சிறுதொழில் கல்வி

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், பெறாதவர்கள் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு அல்லது ஈராண்டு பயிற்சிப் பெற்றுப் பணியில் சேரலாம்.

இத்தொழிற்பயிற்சி நிறுவனங்களில் கம்மியர், கடைசல் பிடிப்பவர் கட்டட வரைவாளர், நில அளவையாளர், தச்சர், படிப்புகளும், இயந்திரம், வாகனம், தொலைக்காட்சி குளிரூட்டும் கருவி, கைபேசி, கணினி முதலியவற்றைப் பழுதுபார்க்கும் படிப்புகளும் உள்ளன. அவரவர் விருப்பத்திற்கேற்பச் சேர்ந்து படித்து வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

இராணுவம், காவல்துறைப் பணி

பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இராணுவம், காவல் முதலிய துறைகளில் சேர்வதற்கு வாய்ப்புண்டு. இவற்றில் சேர முதலில் உடற்கூறுத் தேர்வு நடைபெறும். அதன் பிறகு எழுத்துத் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றவர்களே பணியில் சேர இயலும்.

ஓட்டுநர், நடத்துனர் முதலிய பணிகளுக்கு உடற்கூறு தகுதியுடையவர்கள் மட்டுமே சேர இயலும். மக்கள் நலப் பணியாளர், சத்துணவு அமைப்பாளர் போன்ற பணிகளிலும் சேரலாம். இப்பணி குறித்த தகவல்கள் அவ்வப்போது அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் ஊடகங்களில் வெளியிடப்படும்.

அரசுப் பணிக்காக காத்திராமல் அவரவர் சுயதொழில் தொடங்கிப் பலரும் வேலை வாய்ப்பைப் பெருக்க வேண்டும். அப்பொழுதுதான் வேலையில்லா நிலை மாறும். சுயதொழில் தொடங்குவதற்கு வழிகாட்டுதல்கள், பயிற்சிகள், கடனுதவிகளை அரசு அளிக்கிறது.

அவற்றைப் பெற்றுச் செயல்படுத்துவதற்கான மனத்துணிவும், முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும் அத்தகையோர் நூற்றுக் கணக்கானோருக்கு வேலை அளிக்கலாம் அவர் வேலைக்காக காத்திருக்கவேர் ஏங்கவோ தேவையில்லை.

வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என்பதற்கேற்ப தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நல்ல வேலையை அனைவரும் பெறலாம். தன்னம்பிக்கையுடன் நமக்கேற்றவேலைவாய்ப்பினைப் பெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பயன்தரும் வகையில் வாழ்வோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து